தலையங்கம்

img

தீர்வு இதுவல்ல...

தெலுங்கானா மாநிலத்தில் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கொடூரமாக பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு நால்வர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் வெள்ளியன்று அந்த நால்வரும் போலீசாரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரும் தப்பி ஓட முயன்றபோது போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக வழக்கம் போல கூறப்பட்டாலும் இவர்கள் திட்டமிட்ட வகை யில் படுகொலை செய்யப்பட்டிருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவாக தெரிகிறது. 

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள் அதிர்ச்சியளிக்கும் வகை யில் அதிகரித்து வருகின்றன. இதற்கெதிராக பொது வெளியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள் ளது. இதை சமாளிக்கவும், திசை திருப்பவுமே இந்த போலி என்கவுண்ட்டர் நடத்தப்பட்டுள்ளது என்றே யூகிக்க வேண்டியுள்ளது. பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்களை தடுக்க அரசு மற்றும் காவல்துறை தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பாலியல் குற்றங்களில் ஈடுபடும் போலிச் சாமியார்கள், அரசியல் பின்புலம் உள்ள பெரிய மனிதர்கள் மிக எளிதாக தப்பிவிடுகின்றனர். 

பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் மிக எளிதாக குண்டர் சட்டத்தி லிருந்து வெளியே வந்தனர். இதனை கண்டித்து போராடிய மாதர் சங்கத்தினர் மீது காவல்துறை தனது வீரத்தை காட்டியது.  பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்க ளுக்கு மது போதை மிக முக்கியக் காரணமாக உள்ளது. பெண்களுக்கெதிரான வன்முறை மற்றும் போதைப் பழக்கத்திற்கெதிராக மாதர் சங்கத்தினர் நடத்திய வீரம் செறிந்த நடை பயணத்தை தாம்பரம் தாண்டி அனுமதிக்க மறுத்து காவல்துறையினர் கொடூர வன்முறையை கட்ட விழ்த்துவிட்டு மாதர் சங்கத் தலைவர்களையும், நடைபயண வீராங்கனைகளையும் கைது செய்தனர்.

 

 

;