செவ்வாய், ஆகஸ்ட் 4, 2020

தலையங்கம்

img

நம்பிக்கையை விதையுங்கள்

நாடு முழுவதும் கோவிட்19 தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 62.42 சதவீதமாக அதி கரித்துள்ளது என்று மத்திய அரசு கூறியுள்ள போதிலும் நடத்தப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை மிகக்குறைவாகவே இருக்கிறது. அதிகமாக சோதனை நடைபெறும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா ஆகிய  மாநிலங்களில் தான் பாதிக்கப்பட்டோர் குறித்த விவரங்கள் அதிகளவில் தெரியவந்துள்ளன. 

நோய்த்தடுப்பு பணிகளில் பெரிய மாநிலங்க ளில் உள்ள மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது கேரளா பல மடங்கு முன்னிலையில் உள்ளது. அம்மாநிலத்தில் உயிரிழப்புகளும் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை சுகாதார கட்டமைப்புகள் அதிக மாக உள்ள மாநிலமாகும்.  நாள்தோறும்  மத்திய கிழக்கு நாடுகள், தென்கிழக்கு ஆசியா என  பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமான நோயா ளிகள் வந்து சிகிச்சை பெற்றுச்செல்லும் மாநில மாக உள்ளது.  இருப்பினும்  கொரோனா பெரும் தொற்று ஏற்பட்ட பின்னர் நமது மாநிலமும் என்ன செய்வதுஎனத் தெரியாமல் தடுமாறியது.

பல்வேறு அரசியல் கட்சிகளின் வற்புறுத்த லுக்குப்  பின்னர்  பரிசோதனைகள் அதிகரிக்கப் பட்டதாலும் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப் படுவதன் வாயிலாகவும் ஏராளமான நோயாளி கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.  

அரசு மருத்துவமனைகளில் சில குறைபாடு கள் இருப்பினும் மருத்துவர்களும் செவிலியர்க ளும் உயிரைப் பணயம் வைத்துச்  சிறப்பான முறை யில் சிகிச்சை அளித்து வருவதால் ஏராளமா னோர் குணமடைந்து வருகின்றனர். விலை உயர்ந்த மருந்துகளும் அரசு மருத்துவமனை யில்தான் உள்ளன. 

கண்ணுக்குத் தெரியாத  பெருந்தொற்றுக்கு எதிராக மனிதகுலம் போராடி வருகிறது. அரசு மருத்துவமனைகள்  என்றாலே ஒருவித நாற்றம், சிகிச்சையில் கவனக்குறைவு, சுகாதாரமின்மை என்ற கருத்து பொதுமக்கள் மத்தியில் நிலவு கிறது. ஆனால் அந்தக் கருத்துக்களைப் புறந் தள்ளி அரசு மருத்துவமனைகள்தான் தனியார் மருத்துவமனைகளால் கைவிடப்பட்ட பல நோயாளிகளைக் கடந்த காலத்திலும் காப்பாற் றின. தற்போதைய அசாதாரண சூழ்நிலையி லும் காப்பாற்றி வருகின்றன.

புதுக்கோட்டையில் இனி பிழைக்கமாட்டார் எனத் தனியார் மருத்துவமனையால் கைவிடப் பட்ட நபர் அரசு மருத்துவமனையால் காப்பாற்றப் பட்டார். நோய்த்தொற்றால் பீடிக்கப்பட்ட  தரும புரி மாவட்ட கல்வி அதிகாரி அரசு மருத்துவ மனையில் காப்பாற்றப்பட்டார். சென்னையில் பல்வேறு உடல் உபாதைகளுடன் உள்ள மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் உயர் அதி காரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட போதிலும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்களால் காப்பாற்றப்பட்டார். 

ஆனால் அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கு நோய்த்தொற்று உறுதியானதுடன் கார்ப்பரேட் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுவது என்பது அரசு மருத்து வர்களை அவமதிப்பது போன்றதாகும். இனிமேலா வது இத்தகைய போக்கை கைவிட்டு அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று மக்களிடம் நம்பிக் கையை விதைக்க முன்வரவேண்டும்.

;