தலையங்கம்

img

ம.பி.கவிழ்ப்பும் மாறாத பாஜகவும்

கொரோனா வைரஸ் பீதியால் நாடே பதற்றத்தில் இருக்க, கர்நாடக பாணியில் மத்தியப் பிரதேசத்திலும் பாஜக ஜனநாயக படுகொலையை அரங்கேற்றியுள்ளது. ம.பி. முதல்வர் கமல்நாத் தமது பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். அந்த மாநிலத்தில் ஆட்சிய மைக்கப் போவதாக பாஜக கூறியுள்ளது. 

கர்நாடக மக்கள் பாஜகவை நிராகரித்த நிலை யில், ஆள்பிடி அரசியல் மூலம் கர்நாடகத்தில் பாஜக ஆட்சியமைத்தது. எடியூரப்பா முதல்வ ரானார். இதேபோன்று ம.பி.யில் ஜோதிராதித்யா சிந்தியாவை பிடித்து தனது வேலையை ஆரம் பித்தது பாஜக. 

அவருக்கு ஆதரவாக ஆறு அமைச்சர்கள் உட்பட 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். அவர்கள் அனைவரை யும் பெங்களூருக்கு கடத்திச் சென்று சிறை வைத்தனர். அவர்களை சந்திக்கச் சென்ற காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங்கிற்கு அனுமதி மறுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் வெள்ளியன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தர விட்டது. காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ராஜி னாமா கடிதம் குறித்து எந்த முடிவும் எடுக்காத ம.பி.சபாநாயகர் அதனை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான் மையை நிரூபிக்க இயலாது என்ற நிலையில் கமல்நாத் ராஜினாமா செய்திருக்கிறார். தொ டர்ந்து 15 ஆண்டுகளாக ம.பி.யில் பாஜக ஆட்சி நடந்து வந்தது. அந்த மாநிலம் பல்வேறு வகைக ளில் பாஜக ஆட்சியாளர்களால் சீரழிக்கப் பட்டது. இந்த நிலையில்தான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை மக்கள் நிராகரித்தனர்.

தேர்தலில் பெறாத வெற்றியை எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவதன் மூலம் சாதிக்க பாஜக களம் இறங்கியது. முதல்வர் பதவி கிடைக்காத அதிருப்தியில் இருந்த ஜோதி ராதித்யா சிந்தியா அவர்களது வலையில் விழுந்தார். உடனடியாக பாஜகவிலும் அவர் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 

மகாராஷ்டிராவில் பெரும்பான்மை கிடைக் காத நிலையில், தேசியவாதக் காங்கிரசை உடைத்து ஆட்சியமைக்க பாஜக முயன்றது. ஆனால் அங்கு அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. தற்போது ம.பி.யில் ஆட்சியமைப்பதன் மூலம் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கியிருக்கிறது பாஜக. இதில் அவர்கள் பெருமைப்படுவதற்கு ஒன்றுமில்லை.

தன்னை வித்தியாசமான கட்சி என்று ஒரு காலத்தில் கூறிக்கொண்டது பாஜக. ஆனால் அனைத்து ஜனநாயக நெறிமுறைகளையும் காலில் போட்டு மிதிப்பதன் மூலம் மிகவும் இழி வாக நடந்து கொள்கிறது அந்தக் கட்சி. குதிரை பேரம், ஆள்பிடி அரசியல், பணம் மற்றும் பதவி யைக் காட்டி வலை விரிப்பது போன்ற செயல்க ளால் ஜனநாயகத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பகத்தன்மையை சீர்குலைக்கிறது அந்தக் கட்சி. ம.பி.யில் நடந்திருப்பது மற்றுமொரு ஜனநாயகப் படுகொலையன்றி வேறல்ல.

 

;