தலையங்கம்

img

கைதட்ட வேண்டாம்; காப்பாற்றுங்கள்

கொரோனா நோய்த்தொற்று மற்றும் முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணி யாளர்கள் மற்றும் காவல்துறையினர் கடவுளுக்கு நிகரானவர்கள். அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்று மத்திய அரசும், தமிழக அரசும் தொடர்ந்து கூறி வருகின்றன. தமிழக அரசு துப்பு ரவுப் பணியாளர்கள் என்கிற பெயரை தூய்மைப் பணியாளர்கள் என மாற்றி அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி கொரோனா நோய்த் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நன்றி தெரி விக்கும் வகையில் வாசலுக்கு வந்து கைதட்ட வேண்டும் என்று கூறினார். சில இடங்களில் தூய்மைப் பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து பாத பூஜை செய்யும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 

ஆனால் மறுபுறத்தில் தூய்மைப் பணியாளர்க ளுக்கு குறைந்தபட்ச பணிப் பாதுகாப்பு நியாய மான ஊதியம் தரப்படுகிறதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. பெரும்பாலான தூய்மைப் பணியா ளர்கள் ஒப்பந்தப் பணியாளர்களாகவே பணி யாற்றுகின்றனர். இவர்களுக்குத் தரப்படும் சொற்ப ஊதியத்திலும் ஒரு பகுதியை இடைத்தரகர்கள் பறித்துக் கொள்கின்றனர். தூய்மைப் பணியாளர்க ளை நிரந்தரப்படுத்த அரசு மறுக்கிறது.

மறுபுறத்தில் உயிரைப் பணயம் வைத்து பணி யாற்றும் இவர்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு உபகரணங்கள் கூட தரப்படுவதில்லை. இது குறித்து கேட்டால், போராடினால் இடமாற்றம் செய்து பழிவாங்கப்படுகிறார்கள்.

இராமநாதபுரம் நகராட்சியில் 100 தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 90 பேர் ஒப்பந்தப் பணியாளர்கள். கடந்த 32ஆண்டு களாக தூய்மைப்பணியாளராக பணியாற்றும் பாலு என்பவர் தூய்மைப் பணியாளர்களுக்கு உரிய பணி உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று கோரி யுள்ளார். இதற்காக தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப் பாட்டம் செய்துள்ளனர். இதற்காக இராமநாத புரத்திலிருந்து 180 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள உசிலம்பட்டிக்கு இவர் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார். தற்போது உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை இதற்கு தடைவிதித்துள்ளது. இதுதான் தூய்மைப் பணியாளர்களை அரசு மதிக்கிற லட்சணம்.

அரசு ஏற்கெனவே அறிவித்தபடி ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மருத்துவ காலிப்பணி யிடங்களை நிரப்ப வேண்டும்  என்று போராடிய தற்காக அரசு மருத்துவர்கள் பழிவாங்கும் நோக் கத்துடன் கொடூரமாக இடமாற்றம் செய்யப்பட்டனர். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நேரத்தில் அவர்களது சேவை மேலும் மேம்படும் வகையில் ஏற்கெனவே பணியாற்றிய இடத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அரசு இதை ஏற்க மறுக்கிறது. இதுதான் மருத்துவர்களை மதிக்கும் லட்சணமா? 

இதேபோல செவிலியர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்று கோருகின்ற னர். இவர்களது போராட்டத்தையும் அரசு கொடூர மாக ஒடுக்கியது. உண்மையில் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைப் பணியில் ஈடுபடுவோருக்கு செய் யப்படும் மரியாதை என்பது அவர்களது பணி நிலை மையை மேம்படுத்துவதே ஆகும். மாறாக கைதட்டி பாராட்டுவதோடு கடமை முடிந்தது என்று கருதலாகாது.

;