வெள்ளி, ஆகஸ்ட் 7, 2020

தலையங்கம்

img

கொள்ளை நோயும், குறுக்கு வழியும்

மாநிலங்களில் மக்கள் ஆதரவு மூலம் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லையென்றால் ஆட்சியைப் பிடித்த கட்சி மற்றும் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பது என்பதை பாஜக ஒரு கலை யாகவே பயின்றுள்ளது. மத்தியில் இருக்கும் ஆட்சியதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு இந்த சித்து வேலையில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

கர்நாடகம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநி லங்களைத் தொடர்ந்து தற்போது பாஜகவினர் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து கொல்லைப் புறம் வழியாக ஆட்சியைப் பிடிக்க பாஜக முயல்கிறது. இதற்காக அவர்கள் கொஞ்சம் கூட கூச்சப்படுவதில்லை. 

முழு நாடும் கொரோனா நோயோடு போரா டிக் கொண்டிருக்கிறது என்று ஒருபுறத்தில் விளம்பரம்  செய்து கொண்டு, மறுபுறத்தில் புதி தாக எந்த மாநிலத்தில் ஆட்சிக் கவிழ்ப்பை அரங் கேற்றலாம் என்பதில்தான் பாஜக குறியாக உள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா நோய் பரவல் உச்சத்தில் இருந்தபோது மத்தியப்பிரதேசத்தில் ஆள்கடத்தல் நாடகத்தை அரங்கேற்றி, அதி ருப்தியில் இருந்த ஜோதிராதித்யா சிந்தியாவை வளைத்து ஆட்சியைப் பிடித்தது பாஜக. கொரோனா நோய்த் தொற்று குறித்து கவலைப்படாமல் ம.பி.யில் ஆட்சிக் கவிழ்ப்பை அரங்கேற்றினர்.

இதே பாணியில்தான் முன்பு கர்நாடகத்திலும் ஆட்சியைப் பிடித்தது பாஜக. தற்போது தங்கள் திருவிளையாடலை ராஜஸ்தானில் ஆரம்பித்துள்ள னர். அங்கு முதல்வராக உள்ள அசோக் கெலாட் டிற்கும், துணை முதல்வராக உள்ள சச்சின் பைலட்டிற்கும் இடையிலான அதிகார மோதல் பாஜகவுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. 

ம.பி.யில் ஜோதிராதித்யா சிந்தியா மூலம் காய் நகர்த்தியது போல ராஜஸ்தானில் சச்சின் பைலட் மூலம் தன் வேலையை பாஜக துவங்கி யுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. மாநில காங்கிரஸ் தலைவர்களிடையே ஏற்படும் அதிகா ரப் போட்டியும், ஈகோ யுத்தமும்தான் பாஜகவின ருக்கு வாய்ப்பு வாசலை திறந்துவிடுகிறது என்பதை காங்கிரஸ் தலைமை கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆனால் கேரள மாநிலத்தில் இடது ஜனநாயக முன்னணி அரசுக்கெதிராக பல்வேறு தருணங்க ளில் பாஜகவுடன் கைகோர்க்க காங்கிரஸ் தயங்குவதில்லை. இப்போதும் கூட அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. இந்த அணுகுமுறை அந்தக்கட்சிக்கு பயன்படாது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மறுபுறத்தில் ஆட்சியதிகாரத்தை பிடிப்ப தற்கு எத்தகைய நெறியற்ற வழிமுறைகளையும் பின்பற்ற பாஜக தயங்காது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையம் உட்பட தங்களுடைய வரம்புக்குள் கொண்டு வந்து வெற்றி பெற முயல்வதும் அப்படியும் முடியவில்லை யென்றால்  ஆள்பிடி அரசியல் மூலம் அதிகாரத்தை நோக்கி தாவுவதும், ஜனநாயகத்திற்கு இழைக்கப் படும் பெரும் அநீதியாகும்.

;