தலையங்கம்

img

செய்யாமல் கெடுக்கும் அரசு!

காவிரியில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து ஒரு மாத காலமாகும் நிலையிலும் கூட, கடைமடை பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் சென்று சேராத நிலையே நீடிக்கிறது.  கடந்த மாதம் 13ஆம் தேதி காவிரி பாச னத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் வழக்கத்தை மீறி கிழக்கு, மேற்கு கால்வாய், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், புள்ளம்பாடி ஆகியவற்றுக்கும் தமிழக முதல்வரால் அன்றைய தினமே தண்ணீர் திறக்கப்பட்டது. ஏனெனில் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசன பகுதிகளில் முதல்வரின் உற்றார் உறவினர்க ளுக்கு நிலபுலங்களும், தோப்பு துரவுகளும் நிறைய உள்ளன. இதனால் வழக்கமாக கடைமடை பகுதிக ளுக்கு  சென்று சேரவேண்டிய தண்ணீர் தாமதமா கிறது ஒருபுறம் என்றால், மறுபுறம் கடைமடை பகுதிகள் மட்டுமின்றி இதர பகுதிகளிலும் ஆறுகளையும், கால்வாய்களையும் தூர்வாரா தது மற்றொரு காரணமாகும்.

வழக்கமாக தண்ணீர் திறக்கப்பட்டு 15 நாட்க ளிலேயே கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேர்ந்து விடும். ஆனால் இந்த முறை ஒரு மாத காலமாகும் நிலையிலும், தண்ணீர் சென்று சேராததற்கு தூர்வாரும் பணி முறையாகவும் முன்னதாகவும் நடைபெறாததே முக்கிய காரண மாகும்.  காவிரியில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்ப தற்கு குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்னதாகவே தூர்வாருதல், மதகுகள் சரிசெய்தல் உள்ளிட்ட பணிகளை முடித்தால்தான் தண்ணீர் கடை மடை பகுதிகளுக்கும் விரைவாக சென்று சேரும். ஆனால் சமீப ஆண்டுகளில் மராமத்துப் பணி களுக்காக ஒதுக்கப்படும் தொகையை எப்படி சுருட்டலாம் என்கிற நோக்கத்திலேயே  தண்ணீர் திறந்தபிறகு கணக்கு காட்டுவதற்காகவே இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.  

இதனால் காவிரியில் அதிகமாக திறக்கப் படும் தண்ணீர் கால்வாய்களை சென்று சேராமல் வீணாக கடலுக்கே சென்று சேர்கிறது. கடந் தாண்டு 227 டிஎம்சி தண்ணீர் கடலுக்கு சென்றது. இந்தாண்டு அதைவிட கூடுதலாகவே வீணாகும் நிலை ஏற்படக்கூடும். ஏனெனில் தற்போது கொள்ளி டம் வழியாக வெளியேறும் 36 ஆயிரம் கனஅடிநீர் கடலில் சென்று சேரும் நிலையே ஏற்பட்டுள்ளது.   இந்நிலை தமிழக அரசு செய்ய வேண்டிய பணியை செய்ய வேண்டிய காலத்தில் செய்யாத தால் ஏற்பட்டுள்ளது. ‘செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க  செய்யாமையானும் கெடும்’ என்கிற குறளே நினைவுக்கு வருகிறது. 

கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேர தொடர்ந்து 20 நாட்கள் முறை வைக்காமல் தண்ணீர் திறந்திட வேண்டும் என்கிற விவ சாயிகளின் கோரிக்கைக்கு தமிழக ஆட்சியா ளர்கள் செவி மடுக்கவே இல்லை. அதனால் தான் கூடுதலாக திறக்கப்படும் தண்ணீர் அணைக் கரை வழியாக வீராணம் சென்று அதுவும் நிரம்பி விட்டது. ஆனால் அதிகமாக வரும் நீரை தேக்க கொள்ளிடத்தில் 2 தடுப்பணைகள் கட்டும் ஜெய லலிதாவின் அறிவிப்பு செயல்படுத்தப்பட்டி ருந்தால் தண்ணீர் வீணாவது தடுக்கப்பட்டி ருக்கும்.

;