தலையங்கம்

img

விடுதலை போற்றுதும்!

நமது இந்திய தேச விடுதலையின்  73 வது ஆண்டை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இதே வேளையில்  இந்திய பொருளாதாரம் உலக மயம், தாராளமயம், தனியார்மயத்தால் சிறை பிடிக்கப்பட்டு கடும் நெருக்கடியில் சிக்கியிருக்கி றது. சிறையிலிருந்து மீண்டிடாத வகையில் நமது பிரதமரே உலகமய சிறைச்சாலையின் சவுகித ராக (காவலராக) நிற்கிறார். சுதந்திர காற்றை சுவாசித்த இந்திய பொருளாதாரத்தை மீண்டும் பெரும் கார்ப்பரேட்களின்  அடிமை கொட்டடியில் அடைக்கும் முயற்சி  அதிதீவிரமாகியிருக்கிறது. இந்திய தொழில்துறையின் வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியை நோக்கி  சென்று கொண்டே இருக்கிறது. முதன் முறையாக 75 தேசிய வழித் தடங்களில் போக்குவரத்து 30 சதவிகிதம் குறைந்தி ருக்கிறது.  டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71 ரூபாய் 37 பைசாவாக வீழ்ச்சியடைந்தி ருக்கிறது. ரூ. 8 லட்சத்து 49 ஆயிரத்து 303 கோடி மதிப்புள்ள ஆட்டோ மொபைல் துறை இந்திய உள்நாட்டு உற்பத்தியில்  குறிப்பிடத்தக்க பங்கை வகித்து வருகிறது. இந்த துறையும் இதுவரை இல்லாத வகையில் வீழ்ச்சியடைந்து, ஏறத்தாழ 3 லட்சம் பேரின் வேலையை நேரடியாக பறித்தி ருந்திருக்கிறது. இந்தியா வரலாற்றில் முதன் முறையாக இரு சக்கர வாகனங்களின் விற்பனை விகிதம் மைனஸ்-ல் 11.7 சதவிகிதமாக வீழ்ச்சிய டைந்திருக்கிறது. 

ஆனால் மறுபுறம் பாஜக மற்றும் மோடிக்கு நெருக்கமான பெரும் கார்ப்பரேட் கூட்டாளிக ளின்  வளர்ச்சி மட்டும் விண்ணை முட்டுமளவு வளர்கிறது. முகேஷ் அம்பானி தனது 58 வருட வாழ்க்கையில் சேர்த்த மிகப்பெரிய செல்வத்தை விட, மோடியின் கடந்த 5 ஆண்டுகால ஆட்சி யில் இருமடங்கு செல்வத்தை சேர்த்திருக்கிறார். அதே போன்று அதானியின் சொத்து மதிப்பு கடந்த நான்கு ஆண்டுகளில் 2.6 பில்லியனில் இருந்து 11.9 பில்லியனாக உயர்ந்திருக்கிறது. இப்படி ஆர்எஸ்எஸ்க்கு நெருக்கமான  நிறுவனங்களின் காலில் மற்ற அனைத்து தொழில் நிறுவனங்களும் சரணடைவதற்கான வேலையை மோடி அரசு கன கச்சிதமாக செய்து வருகிறது. அரசின் சொத்து களை அழித்து பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கால் ஊன்ற கால்கோள் விழா நடத்தப்படுகிறது.  இந்தியாவின் உயிர்நாடியாக விளங்கும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் சமூக, அர சியல், பண்பாடு ஆகிய மூன்றும்  சங்பரிவார கும்பல்களால் கடும் தாக்குதலுக்கு உள்ளாகியி ருக்கின்றன. இதையெல்லாம் மூடி மறைக்க மக்களை சாதி ரீதியாகவும், மதரீதியாகவும் மோதவிட்டு பிரச்சனைகளை மடை மாற்றம் செய்யும் வேலையை சங்பரிவார அமைப்புகள் செய்துவருகிறது.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் முடிவுற்று விடு தலையான இந்தியாவை கார்ப்பரேட்கள் ஆதிக் கத்தின் கீழ் மோடி அரசு கொண்டு செல்கிறது. அதன் மூலம் ஒரே நாடு, ஒரே மதம், ஒரே அரசு என்ற சர்வாதிகார ஆட்சிமுறையை நிலை நிறுத்த பாஜக முயன்று வருகிறது. இந்தியாவின் ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் சுயசார்பை மிகப்பெரிய போராட்டத்தின் மூலம் மீட்டெடுக்க வேண்டும். அப்போதுதான் இந்தியா முழு விடுதலைக்கான சுதந்திர காற்றை சுவாசிக்க முடியும்.

;