தலையங்கம்

img

எங்கே செல்கிறது இந்தியா?

இந்திய மக்களின் சுகாதாரம் மற்றும் வாழ் நிலை குறித்த புள்ளி விபரங்கள் அதிர்ச்சியை ஏற் படுத்துகின்றன.

விரிவான தேசிய ஊட்டச்சத்து கணக்கெடுப் பில் 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 6.4 சதவிகித குழந்தைகளுக்கு மட்டுமே அத்தியாவசிய ஊட்டச் சத்துக்கள் போதுமான அளவில் கிடைக்கின்றன.  

யுனிசெஃப் வெளியிட்டிருக்கும் உலக குழந் தைகள் நிலை குறித்த இந்த அறிக்கையில், இந்தி யாவில் 4 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 38 சத விகிதம் பேர் வளர்ச்சி குன்றியவர்களாக இருக்கின் றனர் என்றும், உலகளாவிய பட்டினி குறியீட்டு பட்டியலில் இந்தியா 102 வது இடத்திற்கு தள்ளப் பட்டிருக்கிறது என்றும் கூறப்பட்டிருக்கிறது.

குழந்தை வயதிற்கேற்ற வளர்ச்சியின்மை என்பது எஞ்சிய காலத்தில் கடுமையான பாதிப்பு களை சந்தித்து ஆக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கும். ஆகவேதான் குழந்தைப் பருவத்தில் போதிய ஊட்டச்சத்து கிடைப்பதை அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என உலக சுகாதார நிறு வனம் வலியுறுத்துகிறது. 2017 ஆம் ஆண்டில் மட்டும்  இந்தியாவில் ஐந்து வயதிற்குட்பட்ட 68.2 சதவிகிதமான குழந்தைகளின் இறப்பிற்கு ஊட்டச்சத்து குறைபாடே காரணம்.

இந்தியாவில் உள்ள ஏழைக்குழந்தைகளில் சுமார் 47 சதவிகிதத்தினருக்கு முழுமையாக நோய்த்தடுப்பு மருந்து (தடுப்பூசி ) கொடுக்கப்படு வதில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் கண்டறி யப்பட்டிருக்கிறது. ஆனால் நோய் தடுப்பு மருந்து கொடுக்கப்படாததால் ஏற்படும் நோய்க ளுக்கு செய்யும் செலவு அவர்களின் குடும்பத்தை வறுமையின் கோரப்பிடியில் சிக்க  வைக்கிறது. இதற்கு அடிப்படைக் காரணமே இந்திய அரசு பொது சுகாதாரத்தை புறக்கணிப்பதுதான்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் சுகாதாரத்திற்கு  1.3 சதவிகிதம் மட்டுமே மோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. ஆனால்  சுகாதாரத்துக்கான  உலக சராசரி ஒதுக்கீடு 5.99 ஆகும். இதிலிருந்தே மோடி அரசுக்கு மக்களின் சுகாதார நலன் மீது எவ்வளவு அக்கறை இருக்கி றது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். 

இந்தியாவில் மருத்துவச் செலவினங்களை ஈடுகட்டுவதற்கே பெரும்பகுதி மக்களின் வருமா னம் போதவில்லை. அதன் காரணமாக மக்கள் வறுமைக்குள் தள்ளப்படுகின்றனர்  என ஆக்ஸ்பாம் அறிக்கை கூறுகிறது. மருத்துவ செலவுகள் மட்டும்  ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3.2 -3.9 கோடி இந்தி யர்களை வறுமைக் கோட்டிற்குக் கீழே தள்ளுகின் றன என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மோடி அரசு செல்வந்தர்களின் வரியில் 0.5 சத விகிதம் உயர்த்தினால்  அந்த  தொகையில் 26 கோடியே 20 லட்சம் மாணவர்களுக்கு பள்ளிப் படிப்பை கொடுக்க முடியும்; அதே போல் 33 லட்சம் மக்களின் உயிரைக் காப்பாற்றும் சுகாதார சேவையை வழங்கிட முடியும் என்கிறது ஆக்ஸ்பாம் அறிக்கை. ஆனால் மோடி அரசு நாட்டின் 50 சதவிகித அம்பானி, அதானி உள்ளிட்ட மக்களின் சொத் துக்கள் அளவிற்கு செல்வங்களை வெறும் 9 பெரும் செல்வந்தர்களிடம் கொண்டு போய் சேர்த்து தனது விசுவாசத்தை காட்டியிருக்கிறது என்பது தான் உண்மை. 

;