தமிழகம்

img

144 தடை உத்தரவால் பாதிப்பு: ஆட்டோ தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க சிஐடியு கோரிக்கை

சென்னை, மார்ச் 25- கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை யுத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ தொழிலாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சம்மேளனத்தின் தலைவர் வி.குமார், பொதுச்செயலாளர் எம்.சிவாஜி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

தமிழக அரசானது மார்ச் 24 மாலை 6 மணிமுதல் 31 ஆம் தேதி வரை 144 உத்த ரவு போட்டுள்ளது. ஏற்கனவே மார்ச் 22 அன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பித் தது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோ னா நோயிலிருந்து பாதுகாக்க இந்த நடவ டிக்கைகளை எடுப்பதாக அரசாங்கங்கள் கூறுகின்றன. கொரோனா பரவாமல் தடுக்க தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது அவ சியம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். உயிரோடு சம்பந்தப்பட்ட விசயம் என்பதால் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதனை பணம் வைத்திருப்பவர்கள் சமாளிக்க முடியும். தினசரி உடலுழைப்பை செலுத்தி, அதன்மூலம் குடும்பம் நடத்தும் ஆட்டோ ஓட்டுநர்கள் கடும் நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். 

ஏனெனில் தினசரி ஆட்டோவிற்கு பைனான்ஸ் கட்டுவது ஒருபுறம், தினசரி வாங்கிய சீட்டு கட்ட வேண்டியது மறுபுறம் என்ற நிலையோடுதான் தங்கள் குடும் பத்தை நடத்த வேண்டியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் விலைவாசியை கட்டுப்ப டுத்தாததால் 5 பேர் கொண்ட குடும்பத்தி ற்கு அன்றாட செலவுக்கு குறைந்தபட்சம் ரூ.500 தேவைப்படும். மேலே சொன்ன ஒவ் வொன்றும் ஆட்டோ தொழிலாளிக்கு அத்தியாவசியமான தேவையாகும். 144 உத்தரவு போடுகின்ற அரசாங்கம் மேல சொன்னவற்றை ஆட்டோ உள்ளிட்ட முறைசாரா தொழிலாளர்களுக்கு உத்தர வாதப்படுத்த வேண்டிய கடமை மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு.

பக்கத்தில் உள்ள கேரள அரசாங்கம் இதனை உறுதி செய்துள்ளது. தமிழக அர சாங்கம் உறுதி செய்து ஆட்டோ தொழிலா ளர்களை பாதுகாக்க ரூ.5 ஆயிரம் என்பதை ஒவ்வொரு ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பத்திற்கும் உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் இந்த நெருக்கடியான நிலையை ஆட்டோ தொழிலாளர்கள் சமாளிக்க முடியும். இந்த நிவாரணத்தை அரசு வழங்க மறுத்தால் வேறுபல விளைவுகளை ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் முறைசாரா தொழிலாளர்கள் சந்திக்க வேண்டி வரும். எனவே மத்திய, மாநில அரசுகள் கொரோனா விலிருந்து பாதுகாப்பதோடு, பட்டினியில் இருந்து பாதுகாக்க  ஒவ்வொரு ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பத்திற்கும் 31 ஆம் தேதி வரை ரூ.5000 வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர். 

;