தமிழகம்

img

விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூ.11 ஆயிரம் கோடி

சென்னை, பிப். 14- 2020-21 நிதியாண்டில் விவசாயிகளுக்கு 11 ஆயி ரம் கோடி ரூபாய் பயிர்க்கடன்  வழங்க இலக்கு நிர்ண யிக்கப்படடுள்ளது என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார். துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு விவசாயி கள் தொழில்நுட்ப ஆலோ சனைகளை பெற ‘உழவர் அலுவலர் தொடர்பு திட்டம்’ செயல்படுத்தப்படும். அடுத்த நிதியாண்டிலும் பிர தம மந்திரியின் பயிர்க்காப்  பீடு திட்டம் செயல்ப டுத்தப்படும் என்றும் நிதி யமைச்சர் கூறினார். கரும்பு விவசாயிகளின் நுண்ணீர்ப் பாசனத்திற்கு 75  கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது. மாநில அரசு பரிந்துரை விலைக்கும் (எஸ்ஏபி), மத்திய அரசு நிர்ணயிக்கும் விலைக்கும் (எப்ஆர்பி) இடையேயான வேறுபாட்டை சரிசெய்ய  கரும்பு உற்பத்தியாளர்க ளுக்கு ஊக்கத்தொகை 2019-20 அரவை காலத்திற்கும் டன் ஒன்றுக்கு 100 ரூபாய் வழங்கப்படும் என்றார். தமிழ்நாடு நிலைக்கத் தக்க மானாவாரி வளர்ச்சி  இயக்கத்தின் கீழ் 250  ஏக்கர் கொண்ட 10ஆயிரம்  தொகுப்புகள் 3 ஆண்டுகளில் உருவாக்கப்படும். இதற்காக  வரும் நிதியாண்டில 180  கோடி ரூபாய் செலவிடப்ப டும். 2020-21 நிதியாண்டில் 7.41 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் ஆயிரத்து 845 கோடி ரூபாய் செலவில் நுண்ணீர்ப்பாசன திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் நிதியமைச்சர் கூறினார்.

உணவு பாதுகாப்பு பூங்கா

திருநெல்வேலி கங்கை கொண்டானில், 77.94 கோடி ரூபாய் செலவில் 53.36 ஏக்கர் பரப்பில் மெகா உணவு பூங்கா அமைக்க அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. மேலும், தேனி, திண்டுக் கல், கிருஷ்ணகிரி, திரு வண்ணாமலை, சேலம், கட லூர், விழுப்புரம், மதுரை  மாவட்டங்களில் வேளாண்  பதப்படுத்தும் மண்டலங்  கள் நிறுவ உத்தேசிக்கப் பட்டுள்ளது. சேலம் கால்  நடை அறிவியலில் ஒருங்கி ணைந்த ஆராய்ச்சி மேம்பட்ட  நிலையத்திற்கு 199 கோடி  ரூபாயும், உழவர் பாது காப்பு திட்டத்திற்கு 201  கோடி ரூபாயும் ஒதுக்கப் பட்டுள்ளது என்றும் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.
 

;