தமிழகம்

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

அதானி திட்டம்: மீனவர்கள் எதிர்ப்பு
சென்னை:

காட்டுப்பள்ளியிலுள்ள அதானி துறைமுகத்தின் விரிவாக்கத் திட்டத்திற்கு எதிராக பழவேற்காடு மீனவர்கள்வியாழனன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். “இந்தப்போராட்டம் இதோடு நிற்காது. மீன் பிடித்தல் மீனவர்களின் உரிமை. எங்கள் உயிரைக் கொடுத்தாவது எங்கள் உரிமையைப் பாது காப்போம்” என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.  

அரசியல் விளம்பரங்களை  தடை செய்ய டிவிட்டர் முடிவு
வாஷிங்டன்:

டிவிட்டர் அடுத்த மாதம் அரசியல் விளம்பரங்களை தடை செய்யும் என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார்.டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி  ஜாக் டோர்சி  டிவிட்டரில், அனைத்து அரசியல் விளம்
பரங்களையும் உலகளவில் நிறுத்துவதற்கான முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். சில காரணங்களால் நாங்கள்  உலகளவில் டிவிட்டரில் அனைத்து அரசியல் விளம்பரங்களையும் நிறுத்த முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் முதல்வர் எச்சரிக்கை
ஜெய்ப்பூர்:

ஒரு கட்சி ஆட்சியை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் எச்சரிக்கை விடுத்துள்ளார். முதல்வர் அசோக் கெலாட் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள், தாங்கள் ஜனநாயகத்தை நம்பாத கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்பதை உணரவேண்டும். இதுவரை இல்லாத அளவுக்கு நாட்டை அவர்கள் (பாஜக)  வழிநடத்தி வருகின்றனர். ஒரு கட்சி ஆட்சியை நோக்கி இந்தியா வேகமாக சென்று கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார். 

;