தமிழகம்

img

பணிகள் துவங்கும் முன்பே ஆய்வு மையத்தை மூடத் துடிக்கும் மோடி அரசு

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த மேலேரிபாக்கத்தில் தடுப்பூசி தயாரிப்பு பூங்காவும், மருத்துவப் பூங்காவும் கொண்ட மிகப் பெரிய வளாகத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்தியாவில் தடுப்பூசி  உற்பத்தி கணிசமாகக் குறைந்துவிட்ட நிலையில்  தடுப்பூசிகளை  வெளிநாடுகளிலிருந்து  இறக்குமதி செய்யும் நிலை தற்போது உள்ளது. இந்தியாவிற்கு தேவையான தடுப்பூசி மருந்துகளை  உள்நாட்டி லேயே  தயாரிப்பது இந்த ஆய்வு மைய த்தின் நோக்கமாகும்.  மத்திய சுகாதாரத்  துறையின் கீழ்  செயல்படும் எச்.எல்.எல் பயோடெக் மூலம் இத்திட்டம் செயல் படுத்தப்படும் என மத்திய அரசு அறி வித்தது.

ரூ.594 கோடியில்  முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுத்  திட்டத்தைச் செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டதால் திட்டத்தின் மதிப்பு 2019ஆம் ஆண்டில் ரூ.904 கோடியாக அதிகரித்தது.  முதற்கட்ட மதிப்பீட்டின் படி  ஒதுக்கப்பட்ட நிதியின் படி தடுப்பூசி பூங்கா அமைக்கப்பட்டு  அதில் தடுப்பூசி மருந்துகளைத் தயாரிப்பதற்கான  உலகத்தரம் வாய்ந்த  இயந்திரங்கள்  பொருத்தப்பட்டுள்ளன.  உயர்த்தப்பட்ட திட்ட மதிப்பீட்டின்படி  கூடுதலாக  வழங்கவேண்டிய  நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தால் ஆய்வு மையத்தில்  தடுப்பூசி மருந்துகளை உடனடியாக தயாரிக்க முடியும்  எனஅதன்  ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். உயர்த்தப்பட்ட திட்ட மதிப்பீட்டுக்கு  ஒப்புதல் வழங்க முடியாது என்றும் அவ்வளவு முதலீட்டில்  தடுப்பூசி  பூங்காவை அமைத்தால் அதை லாபத்தில் இயக்க முடியாது என்றும்  மத்திய அரசு தெரிவித்ததாகக் கூறப்படு கின்றது. இதனைத் தொடர்ந்து தடுப்பூசி  பூங்காவில் பணியாற்றிய 174 பணி யாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க முடியாது என்றும் மாற்று வேலை யைப்  பார்த்துக் கொள்ளும் படியும்  நிர்வாகம் திடீரென கூறியது. இதனால் தடுப்பூசி உற்பத்தி மற்றும் ஆய்வு மையம் துவங்குவதற்கு முன்பாகவே அதை மூடும் வேலையில் மோடி அரசு  ஈடுபட்டுள்ளது.

தடுப்பூசி உற்பத்தி பூங்காவை  ஆய்வு செய்த உலக சுகாதார  நிறுவ னத்தினர் உலகத்தரத்தில் அமைக்கப் பட்டிருப்பதாக  சான்றளித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.  இந்த தடுப்பூசி ஆய்வு மையம் திறக்கப்பட்டால் பென்டா வேலண்ட் தடுப்பூசி, ஹெபடைடிஸ்-பி, ரேபிஸ்,  மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட 7 வகையான தடுப்பூசிகளை  உற்பத்தி செய்ய முடியும் என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற தடுப்பு மருந்துகள்  இந்தியாவில் குறைந்த அளவே தயாரிக்கப்படுவதால்  பெருமளவில் வெளிநாடுகளிலிருந்தே வாங்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் மத்திய அரசு உயர்த்தப்பட்ட மதிப்பீட்டுத் தொகையை வழங்காததால் அங்கு பணிசெய்திடும் 174 ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமலும், அவர் களுக்கான இருப்பிடம் போக்குவரத்து, உணவு உள்ளிட்ட வசதிகளும் நிறுத்தப் பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தடுப்பூசி மையத்தில் பணி செய்திடும் ஊழியர்கள்  கடந்த இரண்டு நாட்களாக ஊதியம் வழங்கிட வலியுறுத்தியும், ஆய்வு மையத்தைத் தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் எனவலியுறுத்தியும் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் .இ.சங்கரிடம் கேட்டபோது, தடுப்பூசி உற்பத்தி பூங்காவை அதன் உயர்த்தப்பட்ட மதிப்பீட்டில் திறந்தால் அதை லாப நோக்கத்தோடு நடத்த முடியாது என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை ஏற்கமுடியாது. நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு தடுப்பூசி மருந்துகள் குறைந்த விலையில் கிடைத்திடும் வகையில் தயாரிக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும். சுமார் ரூபாய் 600 கோடியில் கட்டப்பட்டுள்ள உலகத் தரம் வாய்ந்த தடுப்பூசி ஆய்வு பூங்கா  துவங்குவதற்கு முன்பே மூடப்படும் நிலையை மத்திய அரசு ஏற்படுத்தி யிருப்பது கண்டனத்திற்குரியது என்றார்.

;