தமிழகம்

img

புதுவை முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை,பிப்.13- வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களை நிறைவேற்றி இருப்பதன் மூலம், புதுவை  வரலாற்றில் புரட்சிகரமான இடத்தைப் பிடித்து விட்டார் முதல்வர் நாராயணசாமி என்று திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முக நூல் பக்கத்தில் பாராட்டு தெரிவித்திருக்கிறார். புதுவை துணை நிலை ஆளுநரின் அச்சுறுத்தலைப் புறந்தள்ளி,  குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதி வேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு  ஆகியவற்றுக்கு எதிராகத் தீர்மானம்- சமூக நீதியைக் காப்பாற்றும் இடஒதுக்கீடு தீர்மா னம ஆகிய முக்கியமான தீர்மானங்களை, சட்டமன்றத்தில்  நிறைவேற்றியதன் மூலம்; ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதி  போன்ற உயர்ந்த கோட்பாடுகளின் மீது,  தனக்கு இருக்கும் ஆழ்ந்த பற்றுதலைக்  கம்பீரமான முறையில் வெளிக்காட்டியிருக்கி றார் புதுவை முதல்வர்.

“இதற்காக எனது ஆட்சியே போனாலும்  கவலை இல்லை”என்று, தலைவர் கலைஞர்  அவர்களின் பாணியில் அவர் கொண்டி ருக்கும் அஞ்சாமையை, மனமாரப் பாராட்டி,  வாழ்த்துகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

சிபிஐ விசாரணை தேவை

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வா ணையத்தில் தொடர்ச்சியாக நடந்த முறை கேடுகள் தொடர்பான கைதுப்படலங்கள் நீடித்து வரும் நிலையில், ஆசிரியர் தேர்வு  வாரியத்தின் மூலமாக நடத்தப்பட்ட ஆசிரி யர் தகுதித்தேர்விலும் முறைகேடுகள் நடந்தி ருப்பது குறித்த புகார்கள் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய வர்கள் அதிகமாகத் தேர்வு செய்யப்பட்டது குறித்து சந்தேகம் எழுப்பும் சில தேர்வர் கள். அது சம்பந்தமான புகாரை முதல்வ ரிடம் கொடுத்துள்ளதாக பேட்டி தந்துள்ளார் கள். அதற்கான விசாரணையை அரசு தொடங்கிவிட்டதா? தொடங்கவில்லை என்  றால் உடனடியாகத் தொடங்க வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட்ட வேண்டும். டி.என்.பி.எஸ்.சி மூலம் நடத்தப்படும் குரூப்-1, குரூப்-2ஏ, கிராம நிர்வாக அலுவலர்  தேர்வு, தொடர்ந்து காவலர் தேர்வு, ஆசிரியர்  தகுதி தேர்வு என அணிவகுத்து வரும் அனைத்துக் குற்றங்களையும் தொகுத்து அவற்றின் மீது, சிபிஐ விசாரணை நடத்த  கால தாமதமின்றி உடனடியாக உத்தர விடப்பட வேண்டும். இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
 

;