தமிழகம்

img

மீண்டு வரும் ராயபுரம்

ராயபுரம் மண்டலத்தில் புதிதாக 29 பேருக்கு தொற்று,70 -நாட்களுக்கு பின் குறைந்த எண்ணிக்கையாக தொற்று பதிவாகியுள்ளது.சென்னையில் இதுவரை 80,961 பேர் பாதிக்கப்பட்டும்,அதில் 64,036 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியும், 15,606 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    ஆரம்பம் முதலே சென்னை ராயபுர மண்டலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வந்தது.மே மாதம் முதல் வாரத்திலிருந்து அதிகரித்து வந்த நிலையில்  ஜூன் மாதத்தில் உச்சத்தை தொட்டது.இந்நிலையில்  ஜூலை மாதத்தில் குறையத் தொடங்கி உள்ளது.

   நேற்று ராயபுரத்தில் புதிதாக 29 பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது.ராயபுரத்தில் 1-ம் தேதி 2309 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நிலையில் 1101 -ஆக எண்ணிக்கை குறைந்துள்ளது.இதில் மொத்த பாதிக்கப்பட்ட  9,596 பேர் எண்ணிக்கையில், 8,596 பேர் குணமடைந்துள்ளனர்.இது 87 சதவிதமாக,அதிகமாக குணமடைந்தோர்  மண்டலமாக ராயபுரம் மாறி உள்ளது
 

;