தமிழகம்

img

மின் இணைப்புக் கட்டணம் செங்குத்தாக உயர்வு

தமிழக அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் : சிபிஎம்

காற்றாலை மின்சாரத்தை கொள்முதல் செய்வதில் கையாளப்படும் தவறான பேங்கிங் முறை மற்றும் அதிகப்படியான கொள்முதல் கட்டணத்தை கைவிட வேண்டும்.  அதானி நிறுவனத்திடமிருந்து பெறப்படும் அநியாய சூரிய ஒளி மின்சாரக் கட்டண கொள்முதல் விலையை குறைக்க வேண்டும்

சென்னை, அக். 8- மிகக்கடுமையான பொரு ளாதார துயரத்தில் சிக்கியுள்ள தமி ழக மக்களை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் விதத்தில் செங்குத் தாக உயர்த்தப்பட்டுள்ள மின் இணைப்புக் கட்டணத்தை உடனடி யாக திரும்பப்பெற வேண்டும் என தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு கூட்டம் அக்டோபர் 8 செவ்வாயன்று சென் னையில் மாநில செயற்குழு உறுப்பி னர் எஸ். நூர்முகமது தலைமை யில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், அ. சவுந்தரராசன், உ. வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

மின் இணைப்பு கட்டண உயர்வால் கடும் பாதிப்பு

தமிழக மின்வாரியம் மின் இணைப்புக் கட்டணத்தை செங்குத்தாக உயர்த்தி தமிழக  மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாகி யுள்ளது. வீடுகள் மட்டுமின்றி தொழில், வர்த்தகம் சார்ந்தவர் களையும் இது கடுமையாகப் பாதிக்கும்.

வீடுகளுக்கு வழங்கப்படும் மின் இணைப்புகளுக்கான கட்டண ங்களை பொறுத்தவரை மின் கம்பங்கள் (ஓவர்ஹெட்) வழியாக வழங்கப்படும் ஒருமுனை மின் இணைப்புக்கு ரூ. 1600/- என்று இருந்த கட்டணத்தை ரூ. 2800/- ஆகவும், புதைவட கம்பிகள் (கேபிள்) மூலம் வழங்கப்படும் ஒரு முனை இணைப்பு வசதிக்கு ரூ. 6400/-ஆகவும், மும்முனை இணைப்பு கட்டண தொகையை ரூ. 7450/-என்பதை மின்கம்பங்கள் மூலம் வழங்கப்படும் மும்முனை மின் இணைப்புக்கு ரூ. 11,550/-ஆகவும், புதைவட கம்பிகள் (கேபிள்) மூலம் வழங்கப்படும் மும்முனை இணைப்புக்கு (5 KWH) ரூ. 19,050 எனவும் பல மடங்கு உயர்த்தி மக்களை கடுமையாக அச்சுறுத்தியுள்ளது. மேலும் மின் இணைப்பு துண்டிப்பிற்கான அபராதக் கட்டணம் ரூ.60/என்றிருந்ததை, ரூ.100, ரூ. 150, ரூ. 450 என்று உயர்த்தியுள்ளது. 

ஏற்கனவே மத்திய, மாநில அரசுகளின் பொருளாதார கொள்கை களால் பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் தமிழக மக்களுக்கு இந்த கட்டண உயர்வு மேலும் துயர் அளிப்பதாக உள்ளது. மின் இணைப்பு கட்டணத்தை உயர்த்துவது சம்பந்தமாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்திய போது, அக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் கலந்து கொண்டதோடு, இக்கட்டண உயர் வை முழுமையாக கைவிட வேண்டு மெனவும், கட்டண உயர்வை தவிர்க்க மாற்று வழிமுறைகளை கையாள வேண்டுமெனவும் கூட்டத் தில் வலியுறுத்தப்பட்டு, மனுவும் அளிக்கப்பட்டது. குறிப்பாக, காற்றாலை மின்சாரத்தை கொள்முதல் செய் வதில் கையாளப்படும் தவறான பேங்கிங் முறை மற்றும் அதிகப்படி யான கொள்முதல் கட்டணத்தை கைவிட வேண்டும், அதானிநிறுவனத்திடமிருந்து பெறப்படும் அநியாய சூரிய ஒளி மின்சாரக் கட்டண கொள்முதல் விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கி, மின் இணைப்புக் கட்டண உயர்வை கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் தமிழக மின்சார வாரியமோ, இவ்வாறு வந்த ஆலோசனைகள் எவற்றையும் கருத்தில் கொள்ளாமல் மக்களை கடுமையாக பாதிக்கும்  வகையில் பலமடங்கு மின் இணைப்பு கட்டணத்தை உயர்த்தியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக மின்வாரியம் உடனடியாக இந்த மின்இணைப்பு கட்டண உயர்வினை முழுமையாக கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்புச் சட்டம் இயற்றுக!

உலக மக்கள் தொகையில் 15 சதவிகிதம் பேர் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இந்தியாவில் 2016ம் ஆண்டின் மாற்றுத் திறனாளிகள் புதிய உரிமைச் சட்டத்தின்படி 21 வகையான மாற்றுத் திறனாளிகளை அங்கீகரித்துள்ளது. இதன் அடிப்படையில் இந்தியாவில் 10 கோடிப் பேருக்கு அதிகமாகவும், தமிழகத்தில் ஏறக்குறைய 70 லட்சம் மாற்றுத் திறனாளிகள் இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை குறித்த உருப்படியான எந்த கணக்கீடும் மத்திய, மாநில அரசுகளிடம் இல்லை என்பதும் உண்மை.

சமீப காலங்களில் மாற்றுத் திறனாளிகளிடம் தங்களின் சட்ட உரிமைகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வரவேற்கிறது. இவர்களின் அரசியல் பங்கேற்பை உறுதிப்படுத்துவதன் மூலம் மாற்றுத் திறனாளிகள் குறித்து சமூக கண்ணோட்டத்தையும் மேம்படுத்த முடியும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நம்புகிறது. இச்சூழலில் சமீப காலமாக மாற்றுத் திறனாளிகள் மத்தியில் அரசியல் பிரதிநிதித்துவம் வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. இவர்களின் நியாயமான இக்கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து, முதல்கட்டமாக தமிழக உள்ளாட்சி அனைத்து அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்புச் சட்டம் இயற்றும்படி கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

 

;