தமிழகம்

img

பெண் குழந்தைகள் மீதான பிரச்சனைகளை தீர்க்க சட்டமன்ற சிறப்பு அமர்வினை நடத்துக : உ.வாசுகி

சேலம், நவ.16- பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பிரச்சனைகளைத் தீர்க்க சிறப்பு சட்டமன்ற அமர்வைக் கூட்ட வேண்டும் என சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவருமான உ.வாசுகி வலியுறுத்தியுள்ளார். சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்துள்ள ஊ.மாரமங்கலம் பகுதியில் ஏழு வயது சிறுமி கும்பல் பாலியல் வல்லுறவுக்குள்ளாகி, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.  அந்த சிறுமி மற்றும் சிறுமியின் பெற்றோர்க ளையும்  நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த உ.வாசுகி செய்தியாளர்களிடம் கூறியதாவது:  தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு குறைந்துள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பின்மையும், பாலியல் ரீதியான தாக்குதல்களும் அதி கரித்துள்ளது. ஓமலூர் தீவட்டிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஊ.மாரமங்கலம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகள் பள்ளிக்கு சென்று திரும்பும் போது, அடை யாளம் தெரியாத நபர்களால் தூக்கிச் செல் லப்பட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுள் ளார்.  இந்த சம்பவம் குழந்தைகள் தினத்தில் அரங்கேறியுள்ளது. வெறும் ஏழு வயது சிறுமிக்கு பாலியல் ரீதியான தாக்குதல் நடந்துள் ளது. இது கடும் கண்டனத்துக்குரியது.

போக்சோ சட்டத்தை மதிக்காத காவல் துறையினர்

இந்நிலையில் காவல் துறையினர் இன்று வரை குற்றவாளிகளை பிடிக்காமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது. போக்சோ சட்டத்தின் படி சிறுமிகளுக்கு பாலியல் ரீதியான பிரச்சனை இருக்கும்போது, அவர்களிடம் ஆண் காவ லர்கள் விசாரணை மேற்கொள்ளக்கூடாது. குறிப்பாக சீருடையில் விசாரணை மேற்கொள் ளக்கூடாது. மேலும் விசாரணையின் போது  பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் உடனிருக்க வேண்டும். ஆனால் வெள்ளியன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமியிடம் விசாரணை என்ற பெயரில் பெற் றோர்களை வெளியே அனுப்பிவிட்டு சீரு டையில் இரண்டு காவலர்கள் குற்றவாளிகள் குறித்து அடையாளம் காட்டுமாறு புகைப் படங்களை காட்டி விசாரித்துள்ளனர்.  மேலும் சிறுமியின் பெற்றோர்களிடம் மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளிடம் ஏன் சம்பவம் பற்றி பேசுகிறீர்கள் என மிரட்டும் தொனியில் பேசி உள்ளனர். குற்றவாளிகளை யார் என தெரிந்தே துளசம்பட்டி காவல் துறையினர் கைதுசெய்யாமல் இருக்கிறார்க ளோ என சந்தேகம் ஏற்படுகிறது. எனவே, இச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இது தொடர்பாக அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனவும் வாசுகி தெரிவித்தார்.

மேலும், சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து இதுபோன்ற பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதி கரித்து வருவதை உணர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் பெண்கள் மற்றும் மாதர் அமைப்புகளிடம் கலந்துரையாடல் மற்றும் ஆலோசனைகளை பெற்று குற்றங்க ளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். தமிழக முதல்வரிடம் பலமுறை  மாதர் சங்கம் சார்பில் மனு அளித்தோம். மகளிர் ஆணை யத்தின் மூலம் சில பிரச்சனைகளுக்கு தீர்வு  காண முயற்சி எடுக்கப்பட்டுவருகிறது என முதல் வர் தெரிவித்தார். ஆனால் இதுவரை எந்த  முன்னேற்றமும் இல்லை. எனவே, கிணற்றில் போட்ட கல்லாக உள்ள பெண்களின் பிரச்சனை களுக்கு முடிவுகட்ட சட்டமன்றத்தின் சிறப்பு  அமர்வினை நடத்த வேண்டும் என வேண்டு கோள் விடுத்தார். 

இந்நிலையில், வரும் நவ.25 ஆம் தேதி சர்வதேச வன்முறை எதிர்ப்பு தினமாகும். இதை யொட்டி நவம்பர் 25 முதல் டிசம்பர் 4  வரை தமிழகத்தின் இரண்டு முனைகளில் இருந்து திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்க ளில் இருந்து சென்னை நோக்கி நடைபயணம் நடைபெறுகிறது. ஓமலூர் சிறுமிக்கு நீதி கிடைக்கும் வரை அனைத்திந்திய  ஜனநாயக மாதர் சங்கம் போராட்டங்களை தொடருவோம் என தெரிவித்தார்.  இதனைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அலுவலகத்தில் மாதர் சங்கத்தின் சார்பில் புகார் மனு அளிக்கப் பட்டது. அப்போது மாதர் சங்க மாநிலச் செயலா ளர் ஏ.ராதிகா, மாவட்டச் செயலாளர் ஐ.ஞான சௌந்தரி, மாவட்டத் தலைவர் டி.பரமேஷ்வரி, துணைத்தலைவர் கே.ராஜாத்தி, சிபிஎம் மாவட்டசெயற்குழு உறுப்பினர் எம்.குண சேகரன், பி.அரியாக்கவுண்டர் ஆகியோர் உடனிருந்தனர்.
 

;