தமிழகம்

img

பத்திரிகையாளர் மன்றம் நிவாரண நிதி வழங்கல்

கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் (CPC) சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் பங்களிப்பாக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 20 ஆயிரம் ரூபாய்கான காசோலையை மன்ற நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தொழில் துறையினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன்றம் (CPC) மற்றும் உறுப்பினர்களின் பங்களிப்போடு  இருபதாயிரம் ரூபாய்கான காசோலையை முதல் கட்டமாக மன்ற தலைவர் ஏ.ஆர்.பாபு,செயலாளர் தங்கராஜ்,பொருளாளர் விஜய் ஆகியோர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியிடம் வழங்கினர்.இந்த நிகழ்வின் போது மன்ற  உறுப்பினர்கள், கோவை மாவட்ட மக்கள் தகவல் தொடர்புத்துறை அதிகாரி நல்லதம்பி ஆகியோர் உடனிருந்தார்.
மேலும் , பிரஸ் கிளப் உறுப்பினர்கள் அளிக்கும் நிதியை அடுத்த கட்டமாக வரும் புதன்கிழமை வழங்க உள்ளனர்.
 

;