தமிழகம்

img

மாட்டுக்கறி உண்ட இளைஞரை தாக்கிய 4 பேர் கைது 

தமிழகத்தில் மாட்டுக்கறி உண்ட இளைஞரை தாக்கிய 4பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த 2014ம் ஆண்டு  மோடி ஆட்சி அமைந்ததில் இருந்து பசு பாதுகாப்பு என்ற பெயரில் பசு குண்டர்கள் பலரை தாக்கி உள்ளனர். தாத்திரியில் முகமது அக்லாக் என்பவரை மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி கடுமையாக தாக்கி கொலை செய்தனர். இதைத்தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் பசு குண்டர்கள் வியாபாரிகள் விவசாயிகள் என பலரையும் தாக்கி கொலை செய்தனர். இந்நிலையில் தற்போது நாகை மாவட்டம் பொரவச்சேரியை சேர்ந்தவர் முகம்மது பைசான். இவர் மாட்டுக்கறி சூப் சாப்பிட்டதாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.  இதைக்கண்டு ஆத்திரம் அடைந்த 4 பேர் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் தினேஷ்குமார், கணேஷ் குமார், மோகன்குமார், அகஸ்தியன் ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ்வேளூர் காவல்துறையினர் வழக்கு பதவி செய்தனர்.
 

;