tamilnadu

img

மழை வெள்ளத்தால் மூழ்கிய பயிர்கள்; செய்வதறியாது திகைத்து நிற்கும் விவசாயிகள்.... பெ.சண்முகம் நேரில் ஆய்வு....

நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில், மழை வெள்ளத்தில் மூழ்கிய பயிற்களை தமிழ்நாடு விவசாயிகள் சங்க  பொதுச் செயலாளர் பெ.சண்முகம்பார்வையிட்டார்.நாகப்பட்டினம் மாவட்டம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஜனவரி மாதம் பெய்த தொடர் அதீத கன மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கி விதை நெல்லாக முளைத்து பெரும் இழப்பினை விவசாயிகளுக்கு ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை செவ்வாயன்று நேரில்பார்வையிட்ட தமிழ்நாடு விவசாயிகள்  சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம், சிபிஎம் மாவட்டச் செயலாளர் நாகை மாலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோவை சுப்ரமணியன் ஆகியோர் விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறி, இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கச் செய்வோம் என உறுதியளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெ.சண்முகம் கூறியதாவது:

ஜனவரி முதல் 10 நாட்கள் பெய்த அதீத தொடர் கன மழையால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்லாயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள், மணிலா பயிர்கள் அழிந்து போயுள்ளன. விவசாயிகள் வருமானத்தை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் பயிர்கள் நீரில் மூழ்கி பாழானதால் செய்வதறியாது திகைத்துப் போய் நிற்கின்றனர். ஜனவரி 13 ம் தேதியே பாதிக்கப்பட்ட விவசாயநிலங்களை கணக்கெடுக்க உத்தரவிட்டுள்ள தாக முதல்வர் தெரிவித்துள்ளார். ஆனால்இது வரையிலும் எந்த கிராமத்திலும் எந்தவிதகணக்கெடுப்பு பணியும் தொடங்கப்பட வில்லை. அமைச்சர்களோ , அதிகாரிகளோ யாருமே பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களையும், விவசாயிகளையும் பார்வையிட வரவில்லை என்பது கண்டிக்கத்தக்கது. எனவேதமிழக அரசு உடனடியாக கணக்கெடுப்பு பணிகளை துவங்க வேண்டும். 

மேலும்  மழை நீரில் மூழ்கி பாழடைந்தநெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு முப்பதாயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். மற்ற பயிர்களுக்கு இழப்பீட்டிற்கு ஏற்ப உரிய நிவாரணம் வேண்டும். ஏற்கனவே நிவர், புரெவிபுயலால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கான நிவாரண தொகை கிடைக்கப் பெறாமல் உள்ளது. அந்த தொகையினையும் உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் தமிழ்நாடு முழுவதும் பல லட்சம் ஏக்கர் நிலங்களில் நெல், வாழை, கரும்பு, மணிலா, உளுந்து, பயறு போன்றவைகள் முற்றிலும் அழிந்து போயுள்ளன. எனவே பாதிக்கப்பட்ட பகுதிகளை இயற்கை பேரிடர் பகுதியாக மத்திய அரசு அறிவித்து நிவாரணம் வழங்க முன் வர வேண்டும். தமிழக அரசும்

மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து நிவாரண தொகையை பெற வேண்டும். ஏற்கனவே புயல் பாதிப்பு நிவாரண தொகையாக ரூ.55000 கோடியை மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டுக் கொண்டிருந்த நிலையில் இதுவரை எந்தவிதமான தொகையையும் மத்திய அரசு தமிழகத்திற்குவழங்கவில்லை. மத்தியில் ஆளும் பாஜகவுக்கு நெருக்கமாக இருப்பதற்கு காரணமேதமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்களை யும், நிதிகளையும் பெறுவதற்குத்தான் என்று முதல்வரும் மற்ற அமைச்சர்களும் கூறி வருகின்றனர். ஆனால் மத்தியில் ஆளும் பாஜக அரசோ தமிழகத்தின் நலனில் எந்த வித அக்கறையும் காட்டாமல் தொடர்ந்து புறக்கணிக்கும் வகையில்தான் நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

;