தமிழகம்

img

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு இன்று துவங்குகிறது

சாதி ஒழிப்பு போராட்டத்தை தீவிரமாக முன்னெடுக்க உறுதியேற்போம்: கே.சாமுவேல்ராஜ்

தஞ்சாவூர், ஆக.14- தமிழகத்தில் சாதி ஒழிப்பு போராட்டத்தை தீவிர மாக முன்னெடுத்துச் செல்ல, தஞ்சாவூரில் துவங்குகிற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு உறுதியேற்கும் என்று அமைப்பின் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் கூறினார். மாநாடு தொடர்பாக புதனன்று தஞ்சாவூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மூன்றாவது மாநில மாநாடு ஆகஸ்ட்15,16,17 ஆகிய தேதிகளில் தஞ்சையில் (ஜெயராம் மஹால்) தோழர் அசோக் நினைவரங்கில் நடைபெற உள்ளது.  தோழர் அசோக் நினைவாக திருநெல்வேலியிலி ருந்து கொண்டுவரப்படும் சமூகநீதி சுடர், நந்தீஸ், சுவாதி நினைவாக ஓசூரில் இருந்து கொண்டுவரப் படும் சாதி ஆணவப் படுகொலை ஒழிப்பு சுடர், வெண் மணியில் இருந்து எடுத்து வரப்படும் வெண்மணி தியாகிகள் நினைவுச் சுடர், அரியலூரில் இருந்து நந்தினி, அனிதா நினைவாக எடுத்து வரப்படும் கல்வி உரிமைச் சுடர், ராயமுண்டான்பட்டியில் இருந்து எடுத்து வரப்படும் தோழர் என்.வெங்கடாசலம் நினைவுச் சுடர் ஆகியவற்றை பெறுகிற நிகழ்வோடு ஆகஸ்ட் 15 (இன்று) பிற்பகல் இரண்டரை மணிக்கு மாநாடு துவங்குகிறது.  சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதி யரசர் கே.சந்துரு  மாநாட்டை துவக்கி வைக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் கே. பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுபாஷினி அலி, கேரள முன்னாள் சபாநாயகர் ஆர். ராதா கிருஷ்ணன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். 

தமிழ்நாட்டில் சாதிய வன்கொடுமைகளுக்கு எதி ராக போராடுவதோடு உழைக்கும் மக்களின் ஒற்று மைக்காகவும் குரல் கொடுத்து வருகின்ற தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பிரதிநிதிகள் மூன்று நாள் மாநாட்டில் பங்கேற்று தமிழ்நாட்டில் சாதி ஒழிப் பிற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கிறார்கள். அதனை தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது.  16 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தமிழ்நாடு முழு வதும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக போரா டிய கள போராளிகளுக்கும், சாதிய ஆணவப்படு கொலைகள் மற்றும் சாதிய வன்கொடுமைகளால் படு கொலை செய்யப்பட்ட குடும்பங்களின் உறுப்பினர் களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.  தொடர்ந்து நடைபெறக்கூடிய மாநாடு 17 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு மாபெரும் சாதி ஒழிப்பு பேரணி பொதுக்கூட்டத்தோடு நிறைவடைகிறது. தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தோழர்கள் இந்த சாதி ஒழிப்பு பேரணியில் பங்கேற்கிறார்கள்.  நிறைவாக நடைபெறக்கூடிய பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா ளர் சீதாராம் யெச்சூரி, வரவேற்பு குழு தலைவர் இயக்கு நர் ராஜூ முருகன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் பி.சம்பத், பொதுச் செயலாளர் கே. சாமுவேல் ராஜ் மற்றும் மாநில நிர்வாகி கள் எஸ்.மகேந்திரன், சிவஞானம், மோகனா, சின்னை. பாண்டியன் ஆகியோர் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சாமி.நடராஜன், தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் கே.அபி மன்னன், மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன், வழக்கறிஞர் வெ.ஜீவக்குமார், என்.சிவகுரு ஆகியோர் உடன் இருந்தனர்.

வெண்மணி தியாகிகள் ஜோதி

தஞ்சை மாநகரில் இன்று (ஆகஸ்ட் 15) துவங்க வுள்ள தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முண்ணணியின் மாநில மாநாட்டை முன்னிட்டு, நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம், கீழ வெண்மணி தியாகிகள் நினைவிடத்திலிருந்து புதன்கிழமை மாலையில் வெண்மணி தியாகிகள் சுடர்ப் பயணம் எழுச்சி யுடன் புறப்பட்டது. இந்நிகழ்ச்சிக்குத் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் சி.வி.ஆர். ஜீவானந்தம் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகை மாலி, வெண்மணி தியாகிகள் ஜோதியை எடுத்துக் கொடுக்கத் தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநிலத் துணைத் தலைவர் ஜி.ஆனந்தன் பெற்றுக் கொண்டார். சிபிஎம் கீழ்வேளூர் ஒன்றியச் செயலாளர் ஜி.ஜெய ராமன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலா ளர் ஜி.ஸ்டாலின், விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் எஸ்.துரைராஜ், சிஐடியு மாவட்டச் செயலாளர் சீனி.மணி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ப.சுபாஷ்சந்திரபோஸ், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.என்.அம்பிகாபதி, என்.எம்.அபுபக்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
 

;