தமிழகம்

img

20 ஆயிரம் பேருக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி

சென்னை,ஆக. 14- மத்திய அரசின் தேசிய திறன் மேம்பாட்டு கழகம் (என்.எஸ்.டி.சி), சரக்கு  போக்குவரத்துத்துறை திறன் கவுன்சில் (எல்.எஸ்.சி) பிலிப்கார்ட் நிறுவனத்துடன் இணைந்து 20 ஆயிரம் பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியை அளிக்கவுள்ளன. சரக்குபோக்குவரத்துத்துறையில விநியோகம் பிரிவில் பணியாற்றும் இந்த  ஊழியர்களின் பணித்திறனை மேம்படுத்தி விநியோக கட்டமைப்மை பலப்படுத்த இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விநியோகம் செய்யும்போது மேற்கொள்ள வேண்டிய அனைத்து அம்சங்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும். திறன் மேம்பாட்டிற்கு மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம்அளிப்பதாக குறிப்பிட்ட சரக்கு போக்குவரத்து திறன்  மேம்பாட்டு கவுன்சில் தலைமை  நிர்வாக  அதிகாரி  டி.எஸ்.ராமானுஜம், அமைப்பு சாராத பிரிவாக உள்ள சரக்கு போக்கு வரத்துதுறையை அமைப்பு ரீதியான துறையாக மாற்ற இந்த திறன்மேம்பாடு பயிற்சி உதவும் என்றார்.

;