தமிழகம்

img

திருப்பூர்: கண்டெய்னர் லாரியும் கேரள பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து -19பேர் பலி

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் கண்டெய்னர் லாரியும், கேரள மாநில பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்துக்குள்ளானதில் 19 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே, கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், பெங்களூரிலிருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கேரள மாநில அரசு சொகுசு பேருந்தும், கோவையிலிருந்து சேலம் நோக்கி டைல்ஸ் கற்கள் ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரியும், நேருக்குநேர் மோதியது.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் உட்பட 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்தில் மொத்தம் 48 பேர் பயணித்துள்ளனர். இவர்களில் 25 க்கும் மேற்பட்டோர் படு காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தில் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. 
இந்நிலைpaயில் விபத்தில் உயிரிழந்த அனைவரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

;