தமிழகம்

img

கொரோனாவுக்கு தமிழகத்தில் 2வது பலி

விழுப்புரம், ஏப். 4- தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரத்தில் 52 வயது நபருக்கு மூச்சுத் திணறல் அதிகமானது.கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 52 வயது நபர் பலியானார். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்திருக்கிறது.

முன்பே எச்சரித்த சிபிஎம்

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவத் துறை ஊழியர்கள், வருவாய்த்துறையினர், மின் வாரிய ஊழியர்கள், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள், அங்கன் வாடி ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து  ஊழியர்களுக் கும் முகக் கவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள், மருந்து தெளிப்பான்கள், கிருமிநாசினி வழங்குவதற்கான எந்த ஏற்பாடும் இல்லை என்பதை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் என். சுப்பிரமணி கொண்டு சென்றார்.

மாவட்ட - வட்ட தலைமை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், நகராட்சி சுகாதார மையம் ஆகியவற்றில் பணியாற் றும் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராமப் புற தூய்மைப் பணியாளர்க ளுக்கு முகக்கவசம், கையுறைகள் கிடைக்காமல் அவதிப்படுவதையும் சுட்டிக்காட்டிருந்தார். இம்மாவட்டத்தில் கொரோனா தொற்று நோயாளிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மாவட்டத் தலைமை மருத்துவமனை உட்பட வட்டார மருத்துவமனைக ளில் மருத்துவர், செவிலியர், பணியாளர்கள்,  நோயாளி கள், உடனிருப் போருக்குத் தேவையான முகக்கவசங் கள், கையுறைகள், மருத்துவ உபகரணங்கள் இருப்பு இல்லை என்பதையும் மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத் துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தார்.

மாவட்டத்தில் நோய்த் தொற்றை உறுதி செய்வதற்கான பரிசோத னைக் கருவிகள், மருந்து மாத்திரை, வெண்டிலேட்டர் கள் தேவையான அளவு இல்லை என்று மருத்துவ மனை வட்டாரத்தில் தெரிவித்திருப்பது உள்ளபடியே இது முதலமைச்சர் சுகாதாரத் துறை செயலாளர், அமைச்சரின் அறிவிப்புக ளுக்கு மாறாக இருந்தது பேரதிர்ச்சியாக இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டினார். மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத் துறையும் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு மருத்துவமனைகளுக்கு தேவையான வெண்டி லேட்டர் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களையும் போர்க்கால அடிப்படையில் கொள் முதல் செய்து ஓரிரு நாட்களில் வழங்கவில்லை என்றால் விபரீதங்களை சந்திக்க நேரிடும் என்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

;