தமிழகம்

img

வெளிநாடுகளிலிருந்து வந்த 1,048 பேர் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவிப்பு

நாகர்கோவில்: நாடு முழுவதும் கோவிட் 19 நோய்த்தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுவரை நாடு முழுவதும் 560 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட் டுள்ளனர். தமிழகத்தில் ஒருவர் உட்பட 11 பேர் இறந்துள்ளனர். கோவிட் 19 நோய்த்தொற்றை தடுக்க போர் கால அடிப்படையில் பல்வேறு கட்ட நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  வெளி நாடுகளில்  இருந்து சொந்த ஊரான குமரி மாவட்டத்திற்கு வந்து சேர்ந்தவர்களின் பட்டியல் எடுக்கும் பணிகளில் அதிகாரிகள் குழுவினர் ஈடுபட்டு வந்தனர். வெளி நாடு வாழ் அமைச்சகம், சர்வதேச விமான நிலைய அதிகாரிகளின் உதவியுடன் பட்டியல் தயார் செய்து உள்ளனர். அதன்படி,  மார்ச் 1 ஆம் தேதிக்கு பின் வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊரான நாகர்கோவில் உட்பட கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் 1048 பேர்கள் வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.  கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள், காவல் துறை உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளை கண்காணித்து வருகின்றனர். மேலும் இவர்களது வீடுகளில்  அதற்கான நோட்டீஸ் ஒட்டி அடையாள படுத்தியுள்ளனர்.

;