தமிழகம்

img

‘செய்தியாளர்கள் அனைவருக்கும் நிவாரணம் தாருங்கள்’

சென்னை, ஏப். 4-   அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகை யாளர்களுக்கு  3000 ரூபாய் நிவா ரணம் வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை வர வேற்று இருக்கும் பத்திரிகை யாளர் சங்கங்கள் இந்த நிவார ணம் அனைத்து பத்திரிகையா ளர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றும் முதல்-அமைச்ச ருக்கு கோரிக்கை விடுத்துள்ளன. தமிழ்நாடு யூனியன் ஆப்  ஜெர்னலிஸ்ட் மாநிலத் தலை வர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பதிவு செய்து செய்தி நிறுவ னங்களில் பணியாற்றும் அங்கீ கரிக்கப்பட்ட செய்தியாளர்க ளுக்கு ரூபாய் 3000 நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தி ருக்கும் தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

மாநில தலைநகர் மற்றும் மாவட்ட தலைநகரங்கள் மட்டு மன்றி தாலுகா அளவில் பணிபுரி யும் பத்திரிகையாளர்கள் இந்த நேரத்தில் கடும் சவாலான பணி களை மேற்கொண்டு வருகின்ற னர். எனவே அனைத்து செய்தி யாளர்களுக்கும் நிவாரணம் கிடைத்தால் தான் இந்தக் கால கட்டத்தில் உதவியாக இருக்கும்  என்றும் முதல்வரின் கவனத்திற்கு  கொண்டு சென்றுள்ளார். சென்னை பத்திரிகையாளர் மன்றம் உள்ளிட்ட பல்வேறு சங்  கங்களும் முதல்வரின் அறி விப்பை வரவேற்று இருந்தாலும், ஒவ்வொரு தினசரிசெய்தி பத்தி ரிகைக்கும், ஊடக செய்தியா ளர்களுக்கும் அதிகபட்சமாக 11  பேருக்கு மட்டுமே அரசு அங்கீ கரிக்கப்பட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

சில செய்தி நிறுவனங்களுக்கு இதைவிட குறைவாகவும் வழங் கப்பட்டுள்ளது. ஆனால், செய்தி நிறுவனங்களில் பணி புரியும், செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், தொலைகாட்சி நிருபர்கள் அதிகமாக உள்ளனர். அவர்களிடம் அரசு அங்கீக ரிக்கப்பட்ட அடையாள அட்டை இருக்காது. அத்தகையோருக்கு அரசின் நிவாரண தொகை கிடைக்காது. அனைவருக்கும் கிடைக்கும்  வகையில் செய்தி நிறுவனங்க ளில் பணிபுரியும் அனைவருடைய  பெயர் பட்டியலையும் பெற்று நிவாரணம் வழங்கினால்தான் உரிய பலன் போய் சேறும்.அரசு  பரிசீலித்து நல்ல முடிவை அறி விக்க வேண்டும் என்றும் வலி யுறுத்தி இருக்கிறார்கள்.

;