திங்கள், ஆகஸ்ட் 10, 2020

தமிழகம்

img

பெண்களை தவறுதலாக பயன்படுத்திய சாப்ட்வேர் இன்ஜினியர் கைது!

சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் பெண்களை தவறுதலாக பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ,சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் தனியார் ஐ,டி நிறுவனம் ஒன்றில் இரவு நேர வேலை செய்து வருகிறார்.பகல் நேரங்களில் தனது பொழுதுபோக்கிற்காக வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி பல பெண்களின் தொடர்பு எண்களை சேகரித்து வந்துள்ளார். 

இந்நிலையில் சேகரித்த தொலைபேசி எண்களை வைத்து பெண்களிடம் தொடர்பு கொண்டுள்ளார்.அவர்களிடம் பெரிய தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை காட்டி அவர்களின் நிர்வாணப்புகைபடங்களை பெற்று சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துவிடுவேன் என்று மிரட்டி வந்துள்ளார். 

இந்தமாதிரி 16 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 600 பெண்களை இவ்வாறு  பேசி ஏமாற்றி நிர்வாணப்புகைப்படங்களைப் பெற்றுள்ளார்.ஒரு பெண் தாமாக  முன்வந்து கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்த போலிசார்,அவனை விசாரித்து வருகின்றனர்.

;