தமிழகம்

img

தலைமைச்செயலகத்தில் மீண்டும் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

சென்னையில் தலைமைச்செயலகத்தில் இன்று மீண்டும் பாம்பு புகுந்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. 
தமிழக தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள முதல் மாடியில் இரண்டாவது நாளாக இன்றும் பாம்பு புகுந்தது. இதனால் அங்கு பணியில் இருந்த பணியாளர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பாம்பை பிடித்தனர். முன்னதாக நேற்று தலைமைச்செயலகத்தில் 4 வது நுழைவு வாயில் சுவர் அருகே பாம்பு இருந்தது. 
இதையடுத்து சுமார் அரை மணிநேரம் போராடி, தீயணைப்பு வீரர்கள்  பாம்பை பிடித்தனர். 3 அடி நீளமிருந்த அந்தப் பாம்பு, வண்டலூர் பூங்கா வனச்சரகர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து 2 வது நாளாக தலைமைச்செயலகத்தில் பாம்பு புகுந்தால் ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். 
 

;