தமிழகம்

img

முதியோர்கள் உதவிபெற தொலைபேசி  எண்கள் வெளியீடு

சென்னை:
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, முதியவர்கள் குறைகளை தெரிவித்து உதவிகள் பெற தொலைபேசி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.முதியவர்கள் தேவையான உதவிகளை பெற கட்டணமில்லா உதவி எண்ணாக சென்னைக்கு மட்டும் 1253 என்ற எண்ணும், சென்னை தவிர பிற மாவட்டங்களுக்கு 18001801253 என்ற எண்ணும் பொது சேவை எண்ணாக ‘ஹெல்ப் ஏஜ்’ இந்தியா என்ற தொண்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தற்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முதியவர்களும் பயனடையும் நோக்கில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, முதியோர்களின் பிரச்சனைகள் மற்றும் குறைகளை தெரிவித்து உதவிகள் பெற 044-24350375 என்ற தொலைபேசி எண்ணும், 9361272792 என்ற செல்போன் எண்ணும் அறிவிக்கப்படுகிறது.முதியவர்களின் அனைத்து தேவைகள் மற்றும் குறைகளை தெரிவிப்பதற்கு இந்த உதவி எண்களை தொடர்பு கொண்டு பயனடையுமாறு  தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

;