தமிழகம்

img

ஊரடங்கு உத்தரவு மீறல்... தமிழகத்தில் 42,000-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு 

சென்னை
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தேவை இல்லாமல் வீட்டைவிட்டு வெளியில் மற்றும் வாகனங்களில் சுற்றக்கூடாது என எச்சரித்து தமிழக போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  தடையை மீறி வாகனங்களில் சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகன பறிமுதல் நடவடிக்கையை போலீசார் கையாண்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் இதுவரை 144 தடை உத்தரவை மீறிய 42,000-க்கும் அதிகமானோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. 35,000-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஊரடங்கை மீறியதற்காக ரூ.16 லட்சத்து 27 ஆயிரத்து 844 வரை அபராத தொகை விதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

;