தமிழகம்

img

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு  தேசிய நல்லாசிரியர் விருது

சென்னை:
தமிழகத்தை சேர்ந்த இரு ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.பள்ளிகளில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு நல்லாசிரியர் விருதினை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு, தமிழக அரசு சார்பில்சிறந்த ஆசிரியர்களாக 6 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் பெயர்கள் நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டன. இதில் கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வ கண்ணன்,  ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் உள்ள டயமென்ட் ஜூப்ளி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மன்சூர் அலி ஆகியோர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு, தமிழகம் சார்பில் விருதினை பெறவுள்ளனர்.இதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி  மத்திய அரசு சார்பில்  செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதியன்று தில்லியில் நடைபெறவுள்ளது.

;