தமிழகம்

img

சென்னையில் பெண் மீது வெடிகுண்டு வீச்சு


சென்னையில் பெண் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவில் ஆட்டோவில் வந்த பெண் மீது ஆறு பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியும் நாட்டு வெடிகுண்டு வீசியும் கொல்ல முயற்சித்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான பெண், ரவுடி தோட்டம் சேகரின் 3ஆவது மனைவி என தெரியவந்துள்ளது. தப்பியோடிய ஆறு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 
இந்நிலையில் காயம் அடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்த காவல் துறையின் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

;