தமிழகம்

மோடிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம்

சென்னை, மே 7-மோடிக்கு ஆதரவாகத் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று புதுவை முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி,“ ராஜீவ் காந்தியை மோடி கொச்சைப்படுத்திப் பேசியிருப்பது அவருடைய மலிவான அரசியலைக் காட்டுகிறது. மறைந்த தலைவர்களை விமர்சிப்பது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல” என்றார்.தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாகச் செயல்படுகிறது, தேர்தல் விதிமுறைகளை மீறி பிரதமர் பல முறை பேசியுள்ளார். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது மோடிக்கு ஆதரவாகச் செயல்படுவதைக் காட்டுகிறது. தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரச்சாரத்திற்குச் சென்றபோது அவரை தாக்கியிருப்பது கண்டனத்திற்கு உரியது. தில்லியில் முதல்வருக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது என்றும் அவர் கூறினார்.

;