தமிழகம்

img

சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் விபரம் வெளியீடு 

சென்னை 
மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள சென்னை மாநகர் பகுதியில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நாளை முதல் இறைச்சிக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை பெருநகர மாநகராட்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் வீடுகள் அமைந்துள்ள பகுதிகளின் பட்டியலை மண்டல வாரியாக  வெளியிட்டுள்ளது. 

அதில்," ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட பிராட்வே, ராயபுரம், புதுப்பேட்டைப் பகுதிகளைச் சேர்ந்த 10 பேருக்கு கொரோனோ உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்ணாநகர் மண்டலத்திற்கு உட்பட்ட அரும்பாக்கம், அண்ணாநகர், அமைந்தகரை, புரசைவாக்கம் பகுதிகளைச் சேர்ந்த 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட சைதாப்பேட்டை, மாம்பலம் ஆகிய இடங்களில் 6 பேரும், தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டையில் 5 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட சாந்தோம், கோடம்பாக்கத்தில் 4 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்" எனக் கூறப்பட்டுள்ளது. 
 

;