தமிழகம்

img

மாடுகளுக்கான சினை ஊசியை தனியார் மயமாக்க அரசு திட்டம்?

சென்னை, ஜூலை 19- மாடுகளுக்கு சினை பிடிக்கும் ஊசி போடும் பணியை தமிழக கால்நடைத்துறை இதுவரை சிறப்பாக செய்து வரும் நிலை யில் அதை தனியார்மயமாக்க அரசு திட்ட மிட்டுள்ளதாக கால்நடை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து காங்கேயம் காளைகள் ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிறுவனர் கார்த்திகேய சிவசேனாபதி தெரிவித்துள்ள தாவது:  கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சட்டப்பேரவையில் “தமிழ்நாடு கால்நடை கருத்தரிப்பு சட்டம் 2019 (TAMILNADU BOVINE BREEDING ACT 2019”) என்ற மசோதாவை தாக்கல் செய்துள்ளார். ‘BOVINE’  என்பது மாடு, எருமை போன்ற வற்றைக் குறிக்கக் கூடிய ஆங்கில சொல்லாகும். எதற்காக இப்படி ஒரு சட்டத்தை தமிழக அரசு கொண்டு வருகிறது? அந்த சட்டத்தில் குறிப்பாக “செயற்கை கருவூட்டல்“ (ARTIFICIAL INSEMINA TION)  குறித்து ஏற்கனவே சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.  அதற்காக தனியே ஒரு அமைப்பு உருவாக்கப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே தமிழ கத்தில் கால்நடைத் துறை சிறப்பாகச் செயல்பட்டு வரும்போது எதற்காகப் புதிதாக ஒரு அமைப்பை ஏற்படுத்தவேண்டும்? கால்நடைத் துறையே இதை செய்யலாம்.

சட்டத்தின் முக்கிய அம்சங்கள்
வெளிநாட்டு மாட்டு இனங்கள் (ஹோல்ஸ்டின், ஜெர்ஸி) வைத்திருப்பவர் யாரும் காளைகள் வைத்திருக்கக் கூடாது. விவசாயிகள் பூச்சி காளை வைத்து இருக்கத் தடை செய்யப்பட்டு மாடுகளுக்குச் சினை ஊசி தான் செலுத்தப்பட வேண்டும்  என்னும் நிலை உருவாக்கப்படும்.  சினை ஊசிகளை  யார் தயாரிக்க முடியும்?  எப்படித் தயாரிக்க முடியும் ?  சினை ஊசி தயாரிப்பவர்கள் அரசின் அமைப்பின் கீழ் பதிவு செய்திருக்க வேண்டும். இவ் அமைப்பு அவர்களை சோதனைகளுக்கு உட்படுத்த முழு அதிகாரம் வழங்கப்படும் என்றெல்லாம் சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்கிறது தமிழக அரசு. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அடங்கிய வர்த்தகம் இதில் அடங்கியுள்ளது. தமிழ கத்தில் 80 லட்சம்   மாடுகள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் வருடம் ஒருமுறை மாடு சினை பிடிக்க 40 ரூபாய் பெற்று அரசு ஊசிகளை வழங்கி வருகிறது. 

காளைகளை உருவாக்காத ஊசிகள் தற்போது வந்துள்ளன.   அவற்றினை பிரப லப்படுத்தவும்  ஒரே ஒரு தனியார் அமைப்பிற்குக் கொண்டு செல்லவும் இவ்வேலைகள் நடை பெறுகிறதோ என அச்சம் ஏற்பட்டுள்ளது.   கூடிய விரைவில் சினை ஊசி 500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை விற்கக் கூடியதாக மாறும். 80 லட்சம் மாடுகளுக்கு 500  ரூபாய் எனில் கணக்கு வைத்தால் இதில் எவ்வளவு பெரிய வர்த்தகம் அமைந்துள்ளது என அறிய முடியும்.  அடுத்து பாரம்பரிய கால்நடை. அவற்றி லும் பெரும் வில்லங்கத்தை உருவாக்குகின்ற னர்.  8000  வருட காலமாக இந்த மாட்டு இனங்க ளைப் பராமரித்து வந்த மக்களிடம் இருந்து இந்த கால்நடைகளைப் பிரித்து எடுப்ப தற்கான முயற்சி தான் இது.  பூச்சி காளை வைத்து இருப்பவர்கள், அரசாங்கத்திடம் பூச்சி காளை, பொலி காளையை அரசு புதி தாக அமைக்கக் கூடிய அமைப்பின் கீழ் பதிவு செய்ய வேண்டும் எனக் கூறு கின்றனர்.  எதற்காக இந்த சட்டத் திருத்தங்கள்? சிறு குறு விவசாயிகளின் சொத்து கால் நடை. அவர்களின் வாழ்வாதாரங்களைக் கெடுத்து அவர்களது சொத்தைப் பறித்து யாருக்குத் தாரை வார்க்க இந்த முயற்சி? இந்த சட்டம் கொண்டு வருவதற்கு முன், விவசாயிகளை அழைத்து பேசியிருக்க வேண்டும்.

இந்த சட்டம் ஜனநாயகத்திற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் எதிரானது. மீண்டும் மீண்டும் தொடர்ந்து தமிழக மக்கள் மற்றும்  விவசாயிகளை மாநில அரசு  வஞ்சித்து வருகிறது. இதனை வன்மை யாகக் கண்டிக்கின்றேன். இந்த சட்டத்தை  உடனடியாக  கைவிட வேண்டும்.  இவ்வாறு  கார்த்திகேய சிவசேனாபதி தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

;