தமிழகம்

img

கொரோனா மருத்துவ சிகிச்சைக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.பி.க்கள் தலா ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு!

சென்னை, மார்ச் 26- கொரோனா வைரஸ் நோய் மருத்துவ சிகிச்சைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் தலா 1 கோடி நிதி ஒதுக்கீடு செய் துள்ளனர். இதுகுறித்து கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு:

கொரோனா வைரஸ் நோய் மருத்துவ சிகிச்சைக்கான உபகரணங்கள், அதா வது வென்ட்டிலேட்டர் மற்றும் பாதுகாப்பு கருவிகள் வாங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் (மாநிலங்களவை), பி.ஆர்.நடராஜன் (கோவை), சு.வெங்க டேசன் (மதுரை) ஆகியோர் தலா 1 கோடி ரூபாய் சம்பந்தப்பட்ட மருத்துவமனை களுக்கு வழங்குவது என தீர்மானிக்கப்பட் டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கி றோம்.  இதில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஏற்க னவே 1 கோடியே 8 லட்சம் ரூபாய் வழங்கி விட்டார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

மருத்துவ உபகரணங்கள் வாங்கிட...

மேற்கண்ட ரூ.1 கோடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக் காக தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.56.17 லட்சத்தை அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்கான ஒப்புதல் கடிதத்தை மதுரை மாவட்ட ஆட்சியருக்கு புதன்கிழமை வழங்கியுள்ளார். இதன்படி, செயற்கை சுவாசக் கருவி 2, தெர்மல் ஸ்கேனர் 5, முகக் கவசம் (என்95) 1,000, மூன்றடுக்கு முகசுவாசம் 10 ஆயிரம், பாதுகாப்பு கவச உறைகள் 10,000, ஆக்ஸிஜன் சிலிண்டா் 25, நெப்லைசர் 50, குளுக்கோ மீட்டா் 100, தொற்று அகற்றும் மருந்து அடிக்கும் ஸ்பிரே 5 என்பன உள்ளிட்ட 17 வகையான மருத்துவ உபகரணங்கள் வாங்குவ தற்காக மொத்தம் ரூ.56 லட்சத்து 17 ஆயி ரத்தை தொகுதி நிதியில் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஒதுக்கீடு செய்யு மாறு பரிந்துரை செய்துள்ளார்.

;