தமிழகம்

img

வெங்காயத்தை மாலையாக அணிவித்து நூதன முறையில் மனு அளிப்பு

மிக கடுமையாக உயர்ந்த வெங்காய விலை

ஈரோடு, டிச. 2- மிகக்கடுமையாக உயர்ந்த வெங்காய விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் வெங்காய மாலை அணிந்து வந்து மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக வெங்காயத்தை மாலைகளாக அணிந்து வந்து நூதன முறை யில் மனு அளித்த அருந்ததியர் இளைஞர் பேரவையினர் கூறுகையில், பெட்ரோல், டீசல் விலை போல நாளுக்கு நாள் வெங்காய விலையும் உயர்ந்து கொண்டே போகிறது. விளை பொருட்கள் இருப்பு இருந்தாலும், அதனை பதுக்கி வைத்துக் கொண்டு, கடு மையான விலையில் வெங்காயத்தை விற் கின்றனர்.  தற்போது, விவசாயிகள் சாகுபடி செய்யும் எந்த விளை பொருளுக்கும், பூச்சி  மருந்து, தொழிலாளர் கூலி, பயிர் செய்வ தற்கான உழைப்பை கணக்கிட்டால் லாபம் கிடைப்பதில்லை. ஒருபுறம் விவசாயிக ளுக்கு போதிய விலை கிடைக்காத நிலை யில், வியாபாரிகள் கடுமையாக விலை வைத்து விற்பதால், பொதுமக்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஈரோடு பகுதியில் தற்போது பல்லாரி வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரையிலும், சிறிய வெங்காயம் கிலோ 130 ரூபாய் முதல் 150 ரூபாய் விற் கப்படுகிறது. இந்த வெங்காயமும், ஈரத் தன்மையுடனும், அழுகிய நிலையிலும் உள்ளது. இதுபற்றி, மாவட்ட, மாநில நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு, பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என கேட்டுக் கொண்டனர்.

;