தமிழகம்

img

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 29 பேராக உயர்வு

கொரோனா பாதிப்பு

சென்னை, மார்ச் 26- தமிழகத்தின் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 பேராக அதிகரித்துள்ளது.   மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் 18 வயது இளைஞர் ஆவார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நபரோடு தொடர்பில் இருந்த வர் ஆவார்.

இன்னொருவர் ராணிப்பேட்டை மாவட் டம் வாலாஜாபேட்டையை சேர்ந்த 63 முதிய வர் ஆவார். துபாயில் இருந்து திரும்பிய நிலையில், அவருக்கு நடத்தப்பட்ட பரி சோதனையில் கொரோனா உறுதியாகி யுள்ளது. இதனால் வாலாஜாபேட்டையி லுள்ள அரசு தலைமை மருத்துவமனையில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மூன்றவாது  நபர், ஈரோடு மாவட்டம் பெருந் துறையில் சுற்றி வந்த தாய்லாந்து நாட்டின ரோடு தொடர்பில் இருந்த 66 வயது முதியவர் ஆவார். அவரும் மருத்துவமனையில் தனி வார்டில் வைக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை டிவிட்டர் பக்கத்தில் தமி ழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வெளியிட்டுள்ளார். அதில் அவர், 3 பேரும் தனிவார்டுகளில் வைக்கப்பட்டி ருப்பதாகவும், 3 பேரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

;