தமிழகம்

img

குரூப்-2 தேர்வு அவிநாசி மாணவி மாநில அளவில் முதலிடம்

அவிநாசி, டிச. 2- குரூப்-2 தேர்வில் அவிநாசி மாணவி 210.5 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். அவிநாசி விஸ்வி காலனி பகுதியைச் சேர்ந்த வர் சுபாஷினி (22). இவரது தந்தை வடிவேல்(46) திம்மணையாம்பாளையம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தாய் தனபாக்கியம்(46), ஈரோடு மாவட்டம் தள வாடியில் வட்டார கல்வி அலுவலராக பணியாற்றி வருகிறார். சுபாசினி தற்போது எம்ஏ பட்டம் பயின்று வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் குரூப்-2 தேர்வு எழுதிய நிலையில் 210.5 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

;