தமிழகம்

img

காவல் வளையத்திற்குள் சென்னை

சென்னை, மார்ச் 25- சென்னையில் பிற மாவட்டங்  களை சேர்ந்தவர்கள் நுழை யாத வகையில் பலத்த காவல்  கண்காணிப்பு போடப் பட்டுள்ளது. சென்னையில் பிற மாவட்டங்  களை சேர்ந்தவர்கள் நுழை யாத வகையில் பலத்த காவல்  கண்காணிப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து வருவோரை தடுக்க வண்டலூர், பரங்கிமலை, அடையாறில் சோதனை சாவடி கள் வைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகருக்குள் அனுமதியில்லாமல் செல்லும் கார் இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பு கின்றனர். மிக மிக அவசர தேவைகளுக்கு மட்டும் அனுமதி  வழங்கி வருகிறார்கள்.

மாநகரில் முக்கிய சாலை கள் அனைத்திலும் ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைத்து சோதனையை தீவிரப்படுத்தி இருக்கின்றனர். மேலும் ஆட்டோவில் ஒலி பெருக்கி அமைத்துக் கொண்டு  தெருத்தெருவாக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் காவல் துறையினர், அரசின் 144 தடை உத்தரவை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் விழிப்புணர்வையும் ஏற்ப டுத்துவதுதான் தடை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் எச்சரிக்கை செய்து வருகின்ற னர்.

அவசரத்திற்கு  200 பேருந்துகள்

அவசர தேவைக்காக சென்னையில் 200 மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். ஊரடங்கு அமலில் இருந்தா லும் மருத்துவம், சுகாதாரம் மின்சாரம் உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. அத்தியாவசிய துறைகளில் பணி யாற்றும் ஊழியர்கள் பணிக்கு  செல்ல வசதியாக பேருந்துகள் இயக்கப்படும் என தெரி வித்துள்ளனர்.

;