செவ்வாய், ஆகஸ்ட் 4, 2020

தமிழகம்

img

காபி விவசாயிகளை கைவிட்ட மத்திய அரசு - டி. ரவீந்திரன்

தமிழ்நாட்டில் ஒரு லட்சம் ஏக்கர் வரை  காபி பயிரிடப்பட்டுள்ளது. 17880  விவசாயிகள் காபி பயிரிட்டுள்ளனர். இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் காபி விவசாயிகளில் 98 சதவீதம் பேர்  சிறு விவசாயிகள். ஐந்து ஏக்கர் வரை காப்பி தோட்டம் உள்ளவர்கள் 14112 விவ சாயிகள், 5 முதல் 10 ஏக்கர் வரை காப்பி  தோட்டம் வைத்துள்ளவர்கள் 2336 விவ சாயிகள் உள்ளனர். தமிழ்நாட்டில் 2017-18ல் 21400 டன்கள் காபி உற்பத்தியாகி உள்ளது. இது நாட்டின் மொத்த உற்பத்தி யில் 5.8 சதவீதம் மட்டுமே, கர்நாடகா-70.4 சதமும், கேரளா 21.7 சதமும் காபி உற்பத்தி  செய்கிற மாநிலங்களாகும். 

தமிழகத்தில் காப்பி சாகுபடி பரப்பு விபரம்:

இடம்                                           ஹெக்டேர்

திண்டுக்கல் மாவட்டம்     
கொடைக்கானல்                    -    13436 

நீலகிரி மாவட்டம்                   -     8330

சேலம் மாவட்டம் ஏற்காடு,    
கருமந்துறை                             -    6600

தேனி மாவட்டம் போடி,    
பெரியகுளம்                             -    3758

திருப்பூர் வால்பாறை            -    2808

நாமக்கல் கொல்லிமலை    -    4935

மொத்தம்                                  -    39867

1942ல் மத்திய அரசு காபி வாரியம் அமைத்து  செயல்படுத்தி வருகிறது. 1944ல் நிரந்தர மான காபி ஆராய்ச்சி மையமும் அமைக்கப்  பட்டு செயல்படுகிறது. விரிவாக்கம், ஆராய்ச்சி, வளர்ச்சி, சந்தைப்படுத்துதல் தொழிலாளர் பிரச்சனைகள் உட்பட காபி வாரியம் கண்காணித்து மேம்படுத்தி வந்தது. 1991ல் புதிய பொருளாதாரக் கொள்கை அமலாக்கத்திற்கு பிறகு தனி யார் காபி கொள்முதல் அதிகரித்தது; படிப்படியாக காபி சந்தையில் தனியார் ஆதிக்கம் அதிகரித்தது. விவசாயிகளிடம் இடைத்தரகர்கள் குறைந்த விலைக்கு காபி வாங்கி கம்பெனிகளுக்கு சப்ளை செய்கின்றனர். 

விவசாயிகளிடம் ஒரு கிலோ ரொபஸ்ட்டோ காபி கொட்டை ரூ.120 முதல்  ரூ.140 வரையிலும், அராபிகா ரக காபி  கொட்டை ரூ.180 முதல் ரூ.200 வரையிலும்  விலைக்கு வாங்குகின்றனர். சமயத்தில் இதை விடவும் விலை குறைந்துவிடும். விவசாயிகளிடம் வாங்கும் காபி கொட்டையை பதப்படுத்தி உடனடி பவுட ராக்கி (Instant coffee Powder) தயாரித்து ஒரு கிலோ ரூ.1500 முதல் ரூ.6000 வரை விற்று பெரும் லாபத்தை கம்பெனிகள், விளம்பரதாரர்கள், ஏஜெண்ட்டுகளுக்கு காப்பி விற்பனையின் பெரும்பங்கு செல்கிறது. காபி விவசாயிகளுக்கு சிறிய  பங்கே கிடைக்கிறது. உலகத்தில் உற்பத்தி யாகும் காபியில் 65 சதவீதம் உடனடி  காபி பவுடராக அரைத்து விற்கப்படுகிறது. புரூ, நெஸ்ட்டில், இந்துஸ்தான் லீவர், டாட்டா உள்ளிட்ட கம்பெனிகள் கையில் தான் காபி சந்தை உள்ளது. ஆறு லட்சம்  பேர் பல்வேறு வகைகளில் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர். இந்தியாவில் 99 சதவீதம் காபி உற்பத்தி யில் சிறு விவசாயிகளாக உள்ளனர். தமிழ்நாட்டில் 98 சதவீதம் சிறு விவசாயி களாவர். கணிசமாக பழங்குடி மக்களும் உள்ளனர். சிறு விவசாயிகள் காபி அறு வடை செய்து பதப்படுத்தி இருப்பு  வைத்து விற்பவர்களாக இல்லை. அவ்வப்போது உள்ளூர் புரோக்கர்கள் சொல்லும் விலைக்கு விற்று விடுகின்ற னர். இதனால் காபி விவசாயிகளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய விலை  கூட கிடைப்பதில்லை. மொத்த காப்பி  சாகுபடி நிலப்பரப்பில் 75 சதத்தை வைத்துள்ள, மொத்த காபி உற்பத்தியில் 70 சதத்தை வைத்துள்ள சிறு விவ சாயிகளுக்கு கட்டுப்படியாகிற விலையை  மத்திய, மாநில அரசுகள் உறுதிப்படுத்திட வேண்டும். 

பெரும்பாலும் காபிதோட்டங்கள் மழை நீரை நம்பியே இருக்கிறது. நீர்பாசன ஏற்பாடுகள் முறையாக இல்லாதது சிறு  காப்பி விவசாயிகள் சந்திக்கும் முக்கிய மான பிரச்சனையாகும். பெரும் பகுதியின ராக உள்ள சிறு காபி விவசாயிகளால் நீர்பாசன ஏற்பாட்டை மலைகளில் செய்து கொள்ள முடிவதில்லை. தெளிப்பு முறை  பாசனத்திற்கு தேவையான ஸ்பிரிங்லெர்ஸ் உபகரணங்களை காபி  வாரியம் மானிய விலையில் விவசாயி களுக்கு வழங்குவதும் நீர்பாசனத்திற்கு குட்டைகள் அமைத்துத்தரவும் வேண்டும். இதன் மூலம் மகசூல் அதிகரித்திடும். விவசாயிகளுக்கு தேவையான உரம்,  மருந்துகள், உபகரணங்களை காபி போர்டு அனைவருக்கும் மானிய விலையில்  வழங்கிட வேண்டும். 

நூறு, நூற்றி ஐம்பது ஆண்டுகள் வய துள்ள காபி மரங்களை அப்புறப்படுத்தி விட்டு புதிய காப்பி செடிகளை வைத்து  வளர்த்திட தேவையான கடன் வசதிகளை  காபி வாரியம் செய்து தர வேண்டும்.  காபி விவசாயிகள் பணம் தேவைக்கு கந்துவட்டி லேவாதேவிக்காரர்களிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கி சிரமப்படு கின்றனர். 3 சதவீத வட்டியில் விவசாயி களுக்கு கடன் வழங்கிட காபி வாரியம் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதற்கு உதவிட வேண்டும். 

காபி போர்டு காபியை சந்தைப்படுத்து வதில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு இடைத்தரகர்கள், வியாபாரிகள், பெரும் நிறுவனங்களின் ஆதிக்கத்தை அனுமதித்ததனால் பெரும் பகுதியினராக உள்ள சிறு விவசாயிகளின் நலனை மத்திய அரசின் காபி போர்டும், மாநில அரசும் பாதுகாத்திட தவறிவிட்டன. ஆராய்ச்சியாளர்களை நியமித்து, ஊழி யர்கள், அதிகாரிகளை போதிய அளவில் நியமித்து ஒட்டுமொத்த காபி துறைக்கு காபி போர்டு வழிகாட்ட வேண்டும்.  சமூக கூட்டுறவு அமைப்புகளை காபி  விவசாயிகள் அமைத்து காப்பியை அவர்  களே கொள்முதல் செய்து, மதிப்புக் கூட்டிய பொருளாக மாற்றி, சந்தைப் படுத்துவதற்கான ஏற்பாட்டிற்கு தேவை யான நிதியை காபி வாரியம் வழங்கிட வேண்டும். 

மலைகளில் குறிப்பாக கொடைக் கானல் மலையில் விவசாய பயிர்களை  வனவிலங்குகள் அழித்து விவசாயிக ளுக்கு பெருத்த நட்டத்தை ஏற்படுத்தி வரு கிறது. பல ஆயிரம் ரூபாய் கடனை வாங்கி  விவசாயிகள் செய்யும் சாகுபடியை யானை, காட்டெருமை, பன்றி உள்ளிட்ட விலங்குகள் புகுந்து நாசம் செய்து விடு கின்றன. வனவிலங்குகளை காட்டுக் குள்ளேயே நிறுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளையும் வனத்துறையினர் செய்திட வேண்டும்.  அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின்  முடிவுப்படி நாடு முழுவதும் காபி விவசாயிகளை அணிதிரட்டும் பணியின் முதல்கட்டமாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் காப்பி விவசாயிகளின் மாநில சிறப்பு மாநாடு கொடைக்கானல் மலையில் தாண்டிக்குடியில் செப்டம்பர் 29ல் நடைபெறுகிறது. காபி விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகளை விவாதித்து தீர்வுகாண மாநாடு வழிகாட்டும்.
 

;