தமிழகம்

img

திருவாரூரில் தமுஎகச ஆய்வரங்கம்- கலை இலக்கிய இரவு

திருவாரூர், அக்.13- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் மாநில அளவில் விருது பெற்ற படைப்புகளின் ஆய்வரங்கம், பரிசளிப்பு விழா மற்றும் கலை இலக்கிய இரவு திருவாரூரில் சிறப்பாக நடைபெற்றது.  திருவாரூர் கீழவீதியில் உள்ள தனியார் அரங்கில் சனிக்கிழமையன்று காலை 10 மணியளவில் சங்கத்தின் மாநில கவுரவ தலைவர் ச.தமிழ்ச்செல் வன் தலைமையில் ஆய்வரங்கம் நடை பெற்றது. மாவட்ட செயலாளர் கவிஞர் பகவன்ராஜ் வரவேற்புரையாற்றினார். சங்க முன்னோடிகள் வாழ்த்துரை வழங்கினர்.  இந்நிகழ்வில் நாவல், சிறுகதைத் தொகுப்பு, கலை இலக்கிய விமர்சன நூல், மொழிபெயர்ப்பு நூல், ஆவ ணப்படம், கவிதைத் தொகுப்பு, விளிம்பு நிலை மக்கள் பற்றிய படைப்பு, தொன்மம்சார் படைப்பு, மொழி வளர்ச்சிக்கு உதவும் நூல், குழந்தை இலக்கிய நூல் ஆகியவற்றின் படைப்பாளிகளான பிரியா விஜயராக வன், சித்ரன், மானசீகன், கமலாலயன், தவமுதல்வன் நரேஷ்குமார், பச்சோந்தி, முத்துநாகு, நரேந்திரன், சர்மிளா, நீதிமணி ஆகியோர்களின் படைப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 

சங்கத்தின் முத்த நிர்வாகிகள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள் கருத்து ரையாற்றினார்கள். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட் சண்யா, மாநில பொருளாளர் சு.ராமச் சந்திரன், கவிஞர் களப்பிரன், சைதை ஜெ, மணிமாறன், மதுசூதன், மயிலை பாலு, ஏகாதசி, நீலா, மருதுபாரதி, பார்த்திபராஜா, மலர்விழி உட்பட திரளா னோர் ஆய்வரங்கில் பங்கேற்றனர்.  மேலும் இந்நிகழ்வின் போது புத்தர் கலைக்குழு பறை இசைக் கலைஞர் மணிமாறனுக்கு “அமரர் மு.சி.கருப்பையா பாரதி- ஆனந்த சரஸ்வதி அம்மாள் நாட்டுப்புற கலைச்சுடர் விருது”, நாடகவியலாளர் எஸ்.பி. சீனிவாசனுக்கு “முனைவர் த.பரசு ராமன் நினைவு நாடகச் சுடர் விருது”, கிராமிய இசைப் பாடகர் கொல்லங்குடி கருப்பாயிக்கு “திருவுடையான் நினைவு இசைச்சுடர் விருது”, கலை இலக்கியா விற்கு “மேலாண்மை பொன்னுசாமி நினைவு பெண் படைப்பாளுமை விருது” ஆகிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இவர்களை அறிமுகம் செய்து மாநில துணைப் பொதுச் செயலாளர் பிரகதீஸ்வ ரன் உரையாற்றினார். நிறைவாக மாவட்ட தலைவர் இரா.தாமோதரன் நன்றி கூறினார். 

கலை இலக்கிய இரவு

காலை அமர்வைத் தொடர்ந்து இரவு, தமிழர்களின் பண்பாட்டு அடை யாளமாக விளங்கும் கலை இலக்கிய இரவு திருவாரூர் கீழவீதியில் கிளைத் தலைவர் சௌந்தரராஜன் தலைமை யில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஆர்.பகவன்ராஜ் வரவேற்றார். மூத்த நிர்வாகிகள் கவிஞர் மனிதநேயன், ஆர்.கோவிந்தராஜ், ஜி.சண்முகம் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.  மாநில கவுரவத் தலைவர் எழுத்தா ளர் ச.தமிழ்ச்செல்வன் துவக்கவுரை யாற்றினார். மாநில சிறப்பு அழைப்பாளர் எழுத்தாளர் சோலை.சுந்தரபெருமாள், மாவட்ட தலைவர் இரா.தாமோதரன், மாவட்ட துணைத் தலைவர் எஸ்.தியாக ராஜன், மாவட்ட பொருளாளர் கவிஞர் மா.சண்முகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கிளைப் பொருளாளர் ஜி. வரதராஜன் நன்றி கூறினார்.

காலை அமர்வில் விருது பெற்ற படைப்பாளிகள் மற்றும் கலைஞர் களுக்கு நிகழ்வில் சிறப்பு செய்யப்பட்டது. மேலும் போட்டித் தேர்வு பயிற்சியாளர் த.அப்பாராஜ், அரசு பள்ளி ஆசிரியர் க.மாதவன், ஆங்கில இளம் எழுத்தாளர் அருண்மொழிவர்மன், சிறுவணிகர் பி.இளையராஜா ஆகியோர் பாராட் டப்பட்டனர். மாநில பொதுச் செயலாளர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா சிரப்புரையாற்றினார்.  கரிசல் குயில் கிருஷ்ணசாமி, கும்கி திரைப்படப் புகழ் மகிழினி மணி மாறன், புதுக்கோட்டை சுகந்தி, ஆரூர் மகாலிங்கம், வெண்மணி மோகன் இங்கர்சால், கற்கை செல்வா, அங்காடித்தெரு பக்கிரிதாஸ் ஆகியோ ரின் கிராமிய பாடல்கள் இசைக்கப் பட்டன. கவிஞர் வல்லம் தாஜ்பால், கவிஞர் மதுரை வெண்புறா சரவணன் ஆகியோர் கவிதை வாசித்தனர். “கதை சொல்லி” எஸ்.கண்ணன் சுவைபட கதை கூறினார். பாலியாபுரம் முத்தமிழ் கலைக்குழுவினரின் கோலாட்டம், தப்பாம்புலியூர் மணிகண்டன் குழு வினரின் காவடி ஆட்டம், காஞ்சிபுரம் புத்தர் கலைக்குழுவினரின் தப்பாட்டம் ஆகியவை நிகழ்ச்சிக்கு மெருகூட்டின.

கலை இலக்கிய இரவின் முத்தாய்ப் பாக புதுகை பூபாளம் கலைக்குழுவினர் மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தனர். முன்னதாக புதிய தொடர் வண்டி நிலையத்திலிருந்து தமிழறிஞர் திரு.வி.க சிலைக்கு மாலை அணி வித்து சங்கத்தின் மூத்த உறுப்பினர் கே.வேதரத்தினம் துவக்கி வைக்க பேரா சிரியர் ஜி.காண்டீபன் தலைமையில் கலைப் பேரணி நடைபெற்றது. கலை இலக்கிய இரவு நிகழ்ச்சியினை குவளை மு.வீரமணி, ஜி.வெங்கடேசன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். சனிக்கிழமையன்று நடைபெற்ற இந்த ஒரு நாள் நிகழ்வை சங்கத்தின் திருவாரூர் மாவட்டக் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

                 (ந.நி.)
 

;