திங்கள், ஆகஸ்ட் 3, 2020

தமிழகம்

img

என்எல்சி பாய்லர் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு

என்எல்சி பாய்லர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. 

கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நெய்வேலி  என்எல்சி இந்தியாவின்   2 வது அனல்மின் நிலையத்தில் கடந்த புதனன்று கொதிகலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கிய ஒப்பந்த தொழிலாளர்கள் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காயம் அடைந்த 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். 
அவர்களில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து 6 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. 

;