தமிழகம்

img

அமெரிக்கா சென்றார் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை, நவ. 8- துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் 10 நாட்கள் அரசு முறை பயணமாக  வெள்ளியன்று(நவ.8) அதிகாலை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். முன்னதாக சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வீட்டுக்கு சென்ற முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரது வெளி நாட்டுப் பயணத்துக்காக வாழ்த்து தெரி வித்தார். அமெரிக்காவின் சிகாகோ நக ரத்துக்கு செல்லும் துணை முதலமைச்சர், சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பாக நடத்தப் படும் குழந்தைகள் தின விழாவில் பங்  கேற்கிறார். 10-ஆம் தேதியன்று சர்வதேச  சமுதாய ஆஸ்கார் 2019’ விழாவில், துணை  முதல்வருக்கு விருது அளிக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து வாஷிங்டன் டிசி,  ஹூஸ்டன், நியூயார்க் நகரங்களில் நடை பெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற  பின்னர் வரும் 17-ஆம் தேதி துணை முதல மைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் திரும்ப இருக்கிறார்.

;