தமிழகம்

img

ஆட்டுக்கறிக்கும், மீனுக்கும் கட்டுப்படாத ‘ஊரடங்கு’

மதுரை நகரில் அலைமோதிய மக்கள் கூட்டம்

மதுரை, மார்ச் 29- கொரானோவைக் கட்டுப் படுத்தும் நோக்கத்துடன் ஊர டங்கு அமலில் உள்ளது. மதுரை யில் கடந்த நான்கு தினங்களாக காவல்துறை எடுத்த நடவடிக்கை ஒவ்வொரு இடத்திலும் ஒவ் வொரு விதமாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் நிலைமை தலைகீழாக மாறி யிருந்தது. குறிப்பாக கறிக் கடை களிலும், மீன் கடைகளிலும் மக் கள் கூட்டம் அலை மோதியது. நோய்த் தடுப்புக்கான விலகல், முகக் கவசம் அணிவது, குறிப் பிட்ட இடைவெளியில் நின்று பொருட்களை வாங்கிச் செல்வது என்ற விதிமுறைக்கு மதுரை மக் கள் ஞாயிறன்று விலக்களித்து விட்டனர். கடை உரிமையாளர் களோ, காவல்துறையோ மக் களை எச்சரிக்கவில்லை. ஒழுங்கு படுத்தவும் இல்லை.

குறிப்பாக கீழவெளி வீதி, நெல்பேட்டை, பெத்தானியாபுரம் இறைச்சி உள்ளிட்ட அத்தியாவ சியப் பொருட்களை வாங்க மக் கள் திரண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதி பகுதியில் ரோந்துப் பணிக்கு வந்த மதுரை காவல் துறையினர் சிலர், கூட்டம் நிறைந்த கடையொன்றில் வரிசையில் நிற்காமல், தனது காக்சிச்சட்டை யின் அதிகாரத்தைப் பயன் படுத்தி காசுகொடுத்து கறியை வாங்கிச் சென்றதையும் காண முடிந்தது.

சீன அனுபவமும்- கேரள அனுபவமும்

இப்படி மக்கள் ஒரே இடத்தில் கூடுவதால், கடந்த சில நாட்களாக அமலில் இருக்கும் கொரானோ தடுப்புக்கான ஊரடங்கின் மூல மான சமூகத் தனிமைப்படுத்த லின் நோக்கமே கேள்விக்குறி யாகிவிட்டது.

இதைத் தான் சீனா மிக மிகத் திறமையுடன் எதிர்கொண்டது. சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் கொரானோ பாதிப்பு ஏற்பட்டு பெரும் துயரம் உருவான நிலையில் சீன அரசு அதிரடியாக அந்நகரத்தையே முற்றாக முடக்கியது. ஒரு மாத காலம் அந்நகரம் உட்பட பல நக ரங்களையும் சில மாகாணங்களை யும் முழுமையான ஊரடங்கின் கீழ் கொண்டுவந்தது. ஆனால் வீட்டிற் குள் இருக்கும் மக்களின் அன்றா டத் தேவைகளை, அவர்கள் யாரும் வெளியில் வராமலே பூர்த்தி செய்தது சீன அரசு. இதற்கு லட் சக்கணக்கான தன்னார்வ தொண் டர்கள், சுகாதாரப் பணியாளர் களை பயன்படுத்தியது. குறிப் பாக இளைஞர்கள் எண்ணற்றோர் களத்தில் இறக்கப்பட்டனர். முழு மையான வலைத்தள தொடர்பு வலைப் பின்னலை மக்கள் சமூ கங்களில் சீன அரசு அமல்படுத்தி யது. உள்ளாட்சி அமைப்புகளுக் கும், உள்ளூர் அளவிலான கட்டுப் பாட்டு மையங்களுக்கும் வீடு களுக்குள்ளிலிருந்தே யார் வேண் டுமானாலும் தொடர்பு கொள்ள லாம். என்ன தேவைப்படுகிறதோ- காய்கறி, இதர உணவுப்பொருட் கள், இறைச்சி, மருந்துப் பொருட் கள் என ஒவ்வொரு குடும்பத்திற் கும் எது தேவையென்று தகவல் கிடைக்கப்பெறுகிறதோ அதை தன்னார்வ தொண்டர்களே நேரடி யாக கொண்டுசென்று அளித்த னர். ஒரு மாத காலம் மக்களில் ஒரு வர் கூட வெளியில் வரவில்லை. வீட்டிற்குள்ளேயே அவர்களை இருக்கவைக்க அரசு நிர்வாகமும் தன்னார்வ இளைஞர்கள் படை யும் 24 மணி நேரமும் இயங்கினார் கள்.

கேரளாவில்...

இதைத் தான் கேரளத்தில் தற் போது இடது ஜனநாயக முன்னணி அரசு அமல்படுத்தத் தொடங்கி யுள்ளது. 2.3 லட்சம் இளைஞர்கள் கொண்ட தொண்டர் படையை உருவாக்கியுள்ளது. இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்ட ஒரு மணி நேரத்திலேயே சுமார் 50 ஆயிரம் இளைஞர்கள் தன் னார்வ தொண்டர்களாக பதிவு செய்தனர்.

இவர்கள் வீடுகளுக்குள் இருக்கும் மக்களுக்குத் தேவை யான பொருட்களை நேரடியாக கொண்டு சென்று வழங்குவது உள்ளிட்ட பணிகளை செய்ய விருக்கின்றனர். முழுமையான ஊரடங்கு, ஒவ் வொருவரும் ஒன்றுபட்ட உணர்வு டன் தனித்திருத்தல் என்பதுதான் கொரானோ பரவலைத் தடுக்கும் ஒரே வழி. தமிழக அரசு அதை அமலாக்க முயற்சிக்கிறது. ஆனால், அன் றாடத் தேவைகளுக்காகத் தவிக் கும் மக்கள் மீது பழிபோடாமல், நமது கண் முன்னால் இருக்கிற அனுபவங்களை கற்றுக் கொண்டு அமல்படுத்த முயற்சிப் பதே சரியான தீர்வாகும்.

நமது நிருபர்
 

;