தமிழகம்

img

உயர்கல்வியில் இணையான, இணையில்லா படிப்புகள் எவை?

சென்னை, டிச. 6- உயர்கல்வியில் இணையான படிப்பு கள், இணையில்லா படிப்புகள் எவை என்பது குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக உயர்கல்விச் செய லர் மங்கத்ராம் சர்மா வெளியிட்டுள்ள  அரசாணையில், அண்ணா பல்கலைக்கழ கத்தின் பிஇ, பிடெக் ஆடை தொழில்நுட்பம் படிப்பானது, பிஇ, பிடெக் ஜவுளி தொழில்நுட்பத்துக்கு இணையானதல்ல என்று கூறப்பட்டுள்ளது. பிஇ கணினி மற்றும் தொடர்பியல் படிப்பு, பிஇ கணினி அறிவியல் படிப்புக்கு இணையானவை அல்ல என்றும்,  எம்எஸ்சி எலெக்ட் ரானிக் மீடியா படிப்பு, எம்எஸ்சி விசுவல் கம்யூனிகேஷன் இணையானதா என்பது மறுஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

;