தமிழகம்

img

தீக்கதிர் - அறிவிப்பு

நம்முடைய நாடு தற்போது ஒரு அசாதாரண மான சூழ்நிலையை சந்தித்துக் கொண்டி ருக்கிறது. கொரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்த ரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில், பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து முற்றாக முடங்கி யுள்ளது. தபால் சேவையும் பெரும்பகுதி முடங்கி யுள்ளது. 

தீக்கதிர் நாளேட்டை வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு கடுமையான முயற்சிகளை தீக்கதிர் நிர்வாகம் எடுத்தது. எனினும் வாசகர்களிடம் தீக்கதிர் ஏட்டை கொண்டு சேர்ப்பதில் பல்வேறு இடர்பாடு கள் ஏற்பட்டுள்ளன. தீக்கதிரில் பணியாற்றும் ஊழி யர்கள் துவங்கி வாசகர்களிடம் பத்திரிகையை கொண்டு சேர்க்கும் முகவர்கள் வரை முழுமையான ஒத்துழைப்பு வழங்கியபோதும் போக்குவரத்து முடக்கத்தால் நம்முடைய ஏட்டை முழுமையாக கொண்டு சேர்க்க முடியவில்லை. இந்த பின்னணி யில் மறு அறிவிப்பு வரும் வரை தீக்கதிர் அச்சிடு வதை நிறுத்தி வைப்பதை தவிர வேறு வழி யில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இயல்பு நிலைக்கு திரும்பிய வுடன் தீக்கதிர் அச்சுப்பதிப்பு தொடர்ந்து வெளிவரும். அதேநேரத்தில் தீக்கதிர் எண்ம பதிப்பு மற்றும் இ பேப்பர், தீக்கதிர் செயலி, தீக்கதிர் பேஸ்புக், டுவிட்டர் பக்கங்கள் தொடர்ந்து செயல்படும். கட்சி மாவட்டக் குழுக்கள் மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகள் இதை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு நம்முடைய கருத்துக்களை சாத்தியமான அனைத்து வடிவங்களி லும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இதேபோல கட்சியின் சமூக வலைதள பக்கங்களும் தொடர்ந்து செயல்படும். 

 முதன்மை பொது மேலாளர்

;