சினிமா

img

மஞ்சு வாரியர் புகார் எதிரொலி....  பிரபல மலையாள இயக்குனர் கைது

கொச்சி 
மலையாள திரையுலகின் பிரபல நடிகைகளுள் ஒருவரான மஞ்சுவாரியர். இவர் தமிழ் திரையுலகில் சமீபத்தில் ஹிட் கொடுத்த வெற்றிமாறனின் "அசுரன்" படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தவர். கடந்த அக்டோபர் மாதம் மஞ்சுவாரியர் கேரள டிஜிபி லோக்நாத் பெக்ராவை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், “என் கண்ணியத்திற்கு களங்கம் ஏற்படும் வகையிலும், மிரட்டும் வகையிலும் சமூக வலைத்தளங்களில் இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் அவதூறு பரப்பி வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டு இருந்தது. மஞ்சுவாரியர் புகாரை அடுத்து விசாரணையில் களமிறங்கிய காவல்துறை ஸ்ரீகுமார் மேனனை வெள்ளியன்று கைது செய்தது. விசாரணைக்கு அழைக்கும் பொழுதெல்லாம் வர வேண்டும் என எழுதி வாங்கி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ஸ்ரீகுமார் மேனன் மஞ்சுவாரியரை வைத்து பல்வேறு விளம்பர படங்களை இயக்கியுள்ளார்.கடந்த ஆண்டில் ‘ஒடியன்’ என்ற மலையாள படத்தை இயக்கிய ஸ்ரீகுமார் மேனன் அதில் மோகன்லாலுக்கு ஜோடியாக மஞ்சுவாரியரை நடிக்க வைத்து படத்தை ஹிட் படமாக மாற்றினார். இருவருக்கும் நட்பு இருந்த நிலையில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

;