சினிமா

img

நடிகர் விஜய்யிடம் 2-வது நாளாக விசாரணை

சென்னை,பிப்.6-  பிகில் படத்துக்கு வாங்கிய சம்பளம், அதற்கு கட்டிய வருமான வரி குறித்து நடிகர் விஜய்யிடம் இரண்டாவது நாளாக வியாழனன்றும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர்.  சென்னை பனையூரில் உள்ள விஜய்யின் வீட்டில் புதனன்று மாலை 5 மணியளவுக்கு வந்த வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். திரைப்பட படப்பிடிப்பில் இருந்த விஜய்யை  அவரது வீட்டிற்கு அழைத்து வந்து விடிய விடிய விசாரணை நடத்தினர். இந்நிலையில் வியாழனன்று காலை மேலும் 6 அதிகாரிகள் விஜய் வீட்டுக்கு வந்தனர். அவர்களும் ஏற்கெனவே விசாரணை நடத்திய 3 பேருடன் சேர்ந்து, விஜய்யிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பிகில் படத்தை விநியோகம் செய்த பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகளில்  ஒரே நாளில் 65 கோடி ரூபாய் ரொக்கம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

;