செவ்வாய், ஆகஸ்ட் 11, 2020

சினிமா

img

நிதி நெருக்கடியால் சின்னத்திரை நடிகர்கள் தற்கொலை... 

சென்னை 
கொரோனாவால் பல்வேறு தொழில்துறைகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. நிறுவனம் மூடல், ஆட்குறைப்பு, சம்பளம் குறைப்பு போன்ற பல்வேறு நிகழ்வுகள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நெருக்கடியில் சினிமா துறையும் சிக்கி கடும் சேதத்தை சந்தித்தள்ளது. வெள்ளித்திரையில் இருக்கும் பெரிய நடிகர்கள் தரும் உதவித்தொகை மூலம் இவர்கள் வயிற்றை கழுவி வருகின்றனர். 

இந்நிலையில், சென்னையை அடுத்த கொடுங்கையூரை பகுதியில் ஸ்ரீதர் மற்றும் அவரது சகோதரி ஜெய கல்யாணி ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். இருவரும் சின்னத்திரை நடிகர்கள். இவர்களது வீடு கடந்த 2 நாட்களாக திறக்கப்படாமல் இருந்தது. மேலும் வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்துள்ளது. சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வீட்டை உடைத்த போலீசார் உள்ளே பார்த்த பொழுது இருவரின் உடலும் அழுகிய நிலையில் இருந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் இருவரும் நிதிநெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  

;