சினிமா

img

நயன்தாரா நடித்த கொலையுதிர்காலம் படத்திற்கு இடைக்காலத்தடை விதிப்பு - சென்னை உயர்நீதிமனறம்

நயன்தாரா நடித்த கொலையுதிர்காலம் படத்திற்கு இடைக்காலத்தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய கொலையுதிர் காலம் நாவலை அவருடைய மனைவியிடம் இருந்து 10 லட்சம் ரூபாய்க்கு தனது தாய் பெயரில் வாங்கியுள்ளார் பாலாஜி குமார். இவர் முன்னதாக விடியும் முன் என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இந்நிலையில் நடிகை நயன்தாரா நடிப்பில் கொலையுதிர் காலம் என்ற தலைப்பில் எட்செக்ட்ரா மற்றும் ஸ்டார் போலாரிஸ் என்ற தயாரிப்பு நிறுவனங்கள் கொலையுதிர் காலம் படத்தை ஜீன் 14-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து தன் தாயார் பெயரில் உரிமை பெற்று வைத்திருக்கும் கொலையுதிர் காலம் என்ற தலைப்பில் திரைப்படம் வெளியிடுவது காப்புரிமையை மீறிய செயல். எனவே கொலையுதிர் காலம் என்ற தலைப்பில் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என பாலாஜி குமார் கோரியிருந்தார்.  நயன்தாரா நடித்த கொலையுதிர்காலம்  படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளது. இது குறித்து ஜூன் 21-ம் தேதிக்குள் பதிலளிக்கும் படி படத்தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார். 
 

;